தேர்தல் முடிவுகள் நெருங்கியாச்சு..! காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தை ஒத்தி வைக்கணும்..! சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!!
காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஎம் சண்முகம் வலியுறுத்தினார்.
டெல்லியில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற இருக்கும் 50வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம், தமிழ்நாடு உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆணையம், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி நதி நீரை பங்கீடு செய்வதற்கும், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். பல ஆண்டுகளாகத் தொடரும் காவிரி நீர் பிரச்னையில், ஒவ்வொரு கூட்டமும் தமிழ்நாட்டின் நீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இதன் தலைவராக எஸ்.கே. ஹல்தார் போன்ற அதிகாரிகள் பொறுப்பேற்று வருகின்றனர். இந்த ஆணையத்தின் கூட்டங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத் துறை அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். பொதுவாக நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ நடைபெறும் இந்தக் கூட்டங்கள், டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் அல்லது மத்திய அரசின் வளாகத்தில் நடைபெறுவது வழக்கம். இதுவரை 49 கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், 50வது கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி டெல்லியில் திட்டமிடப்பட்டுள்ளது.
முந்தைய கூட்டங்களைப் போலவே, இந்தக் கூட்டத்திலும் காவிரி நதியின் நீர் வரத்து, அணைகளின் நீர் இருப்பு, மழைப்பொழிவு நிலவரம், மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படும். காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: “ஜோசப் விஜய் ஒரு நீர்க்குமிழி; புறக்கணிக்க வேண்டிய சக்தி...” - வெளுத்து வாங்கிய சிபிஐ சண்முகம்...!
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகள் இல்லாததால் காவிரி மேலாண்மை கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்று தெரிவித்தார். மாநில அரசுகள் தேர்வான பின்பு இக்கூட்டத்தை நடத்துவதே பொருத்தமாக இருக்கும். எனவே வரும் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு தான் நம்பர் ஒன்..! அதிகளவு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை..! சாதனை..!