×
 

வாக்காளர்களுக்கு மிரட்டல்.. இதுதான் SIR நடத்த காரணமா? சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்...!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கருத்து கண்டனத்திற்கு உரியது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. நாளை முதல் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்தது.

இதனிடையே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடைபெறுவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி திமுக சார்பில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறிய கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. SIR-காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் கூறியிருந்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் கருத்துக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இப்படியே போனா எப்படி? 35 மீனவர்கள் கைது.. உடனே நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

SIR படிவம் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்ற தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் கருத்து வன்மையான கண்டனத்துக்குரியது என்று கூறினார். SIR என்பதே சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பெரும்பாலான அரசியல் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் வாக்காளர்களை மிரட்டும் இந்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நடுநடுங்க வைக்கும் கொடூரம்... பெண்கள் தலைக் காட்ட முடியல.. கொதித்தெழுந்த தமிழிசை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share