தொடரும் மின்வெட்டு... CPM நிகழ்ச்சியில் சலசலப்பு..! பதில் அளிக்காமல் நழுவிய சண்முகம்..!!
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சிபிஎம் கட்சியின் நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் மாநில செயலாளர் சண்முகம் கடந்து சென்றார்.
கும்மிடிப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்ற நிகழ்வில் மின்வெட்டு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 31-வது மாநில மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று நிலம் நமது உரிமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேடையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேசிக் கொண்டிருந்தபோது திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் சண்முகம் தனது பேச்சை நிறுத்தி கூட்டத்தில் இருந்தவர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பார்த்துக் கொண்டிருந்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் மின்தடை நீடித்ததால் அரங்கத்தில் சலசலப்பு நிலவியது.
அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதால் திருமண மண்டபத்தில் தயார் நிலையில் வைத்திருந்த ஜெனரேட்டர் இயக்கப்பட்டு அரங்கத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. மீண்டும் மின்சாரம் வந்ததைத் தொடர்ந்து சண்முகம் தனது பேச்சை தொடர்ந்தார். தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட மின்வெட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தமிழகத்திற்குள் புகுத்தக்கூடாது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் சண்முகம் நேரடி வார்னிங்... என்னவா இருக்கும்?
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகத்திடம் தமிழ்நாட்டில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது ஒரே இடத்தில் எல்லா கேள்விகளையும் கேட்டு விடுவீர்களா என மழுப்பலாக பதில் அளித்து சமாளித்தார்.
இதையும் படிங்க: ஆ.ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை! சகிக்க முடியவில்லை! திமுகவின் பேச்சுக்கு எதிராக சண்முகம் கொந்தளிப்பு!!