×
 

தைரியமா LOVE பண்ணுங்க! நாங்க கல்யாணம் பண்ணி வெக்குறோம்... சிபிஎம் சண்முகம் பரபரப்பு பேச்சு..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என சண்முகம் தெரிவித்துள்ளார்.

சாதிய ஆணவ படுகொலை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வருக்கத்தையும் ஏற்படுத்துகிறது. சமீபத்தில் நெல்லையில் கவின்குமார் என்ற இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சார்பாக முதலமைச்சரிடம் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று சமீபத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைக்க தயார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களை சாதி மறுப்பு திருமணங்கள் நடத்திக் கொள்ளும் இடமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என்றும் காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கும் எனவும் தெரிவித்தார். 

நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நடந்துள்ளதாகவும் கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சாதியானவர்களை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: திருமாவின் பேச்சு சரியல்ல… சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு..!

தமிழகத்தில் சாது மறுப்பு திருமணங்கள் செய்வதற்கு தனி ஏற்பாடு இல்லை என்றும் சண்முகம் கூறினார். சாதி மறுப்பு காதல் திருமணங்கள் நடத்தும் இடம், அதற்கான பாதுகாப்பு, தலைமை தாங்கி நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் எனும் அதனால் தைரியமாக காதலியுங்கள்., காதலித்து விட்டு வாருங்கள்., திருமணம் செய்து வைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

இதையும் படிங்க: திருமாவின் பேச்சு சரியல்ல… சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share