#BREAKING: வெடித்து சிதறிய நாட்டு பட்டாசுகள்... உடல் கருகி 4 பேர் பலி… சென்னையில் சோகம்...!
சென்னையில் நாட்டு பட்டாசுகள் வெடித்து சிதறிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் போடப்பட்டுள்ளன. முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசுகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் நாட்டு பட்டாசுகள் வெடித்து சிதறிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
சென்னை பட்டாபிராம் அருகே விவசாய தெருவில் உள்ள வீட்டில் நாட்டு பட்டாசுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. தீபாவளி பண்டிகை மற்றும் பிற நிகழ்வுகளுக்கு அங்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த யாசின் மற்றும் சுனில் ஆகிய இருவரும் பட்டாசுகள் வாங்க சென்றுள்ளனர் அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளது. பட்டாசுகள் வைத்திருந்த வீடு முழுவதும் தரைமட்டமாகிய நிலையில், வீட்டில் இருந்த இரண்டு பேரும், பட்டாசு வாங்க சென்ற இரண்டு பேரும் என நான்கு பேர் இடிபாடுகளை சிக்கி உள்ளனர். நான்கு பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 15 நாட்களில் 2வது முறை... வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை... 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!
சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் நான்கு பேரும் உடல்களையும் மீட்டுள்ளனர். வேறு யாரேனும் இடிப்பாடுகளை சிக்கி உள்ளார்களா என்றும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், எங்கிருந்து பட்டாசுகள் கொண்டுவரப்பட்டன, எப்படி வெடி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஜெய்ப்பூர்: மருத்துவமனை ICU-வில் திடீர் தீ விபத்து.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!!