தூத்துக்குடியில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை! உடல் கருகி ஒருவர் பலியான சோகம்...
தூத்துக்குடியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வடிவத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக முக்கிய பொருளாதார அடித்தளமாக விளங்குகின்றன. இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90%க்கும் மேல் சிவகாசியை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. ஆனால், இந்தத் தொழிலின் பொருளாதார முக்கியத்துவத்திற்கு மத்தியில், அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் மனித உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், சமூக மற்றும் பொருளாதார சவாலாகவும் உருவெடுத்துள்ளன.
பட்டாசு தொழில் தமிழ்நாட்டில் 1920களில் தொடங்கியது. தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில் இருந்து உருவான இந்தத் தொழில், பின்னர் பட்டாசு உற்பத்தியாக விரிவடைந்தது. சிவகாசியின் வறண்ட காலநிலை, குறைந்த மழைப்பொழிவு மற்றும் கிடைக்கும் மனிதவளம் ஆகியவை இப்பகுதியை பட்டாசு உற்பத்திக்கு ஏற்ற இடமாக மாற்றின. இன்று, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்தத் தொழிலின் வளர்ச்சிக்கு இணையாக, வெடி விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
தமிழ்நாடு அரசு, வெடி விபத்துகளைத் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் நலத்துறை மற்றும் தீயணைப்புத் துறையின் கீழ், ஆலைகளை தொடர்ந்து கண்காணிக்கவும், பாதுகாப்பு பயிற்சிகளை வழங்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஆங்காங்கே வெடி விபத்துக்கள் நடக்கிறது. உயிரிழப்புகளும் ஏற்படுவதால் பட்டாசு தொழிலை நம்பி உள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: #BREAKING: உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை... பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பு!
இனாம் - அருணாசலபுரம் - தோமாலைப்பட்டி அருகே உள்ள ஜாஸ்மின் என்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் நான்கு அறைகள் தரைமட்டமான நிலையில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். கருகிய நிலையில் கிடந்த ஆணின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் கைப்பற்றி உள்ளனர். மேலும் யாரேனும் விபத்தில் சிக்கி உள்ளனரா என தீயணைப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் பரபரப்பு... கல்லூரியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு! மாணவர்கள் படுகாயம்..!