×
 

கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு... 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு...!

ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

 கடலூர் அருகே இருக்கக்கூடிய கீழ அருமணம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சுபாஷ் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுபாஷ் தேர்தல் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை என்பது நடத்தப்பட்டது. விசாரணையில் தேர்தல் முன்விரோதம் காரணமாகவே கொலை நடைபெற்றதாக தெரிய வந்த நிலையில், இந்த வழக்கில் அதே ஊரை சேர்ந்த வழக்கறிஞர் உட்பட 12 பேரை கைது செய்தனர். 

இதையும் படிங்க: குற்றவாளிகள் வேட்டையாடப்படுவார்கள்... உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்ஜனை...!

இந்த வழக்கு விசாரணையானது கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், தற்போது ஒருவர் வழக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மீதமுள்ள பத்து பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கறிஞர் உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

தாமோதரன், ராஜதுரை, கவியரசன், சுபகணேஷ், தமிழ்வாணன், வில்பர், மணிமாறன், தர்மராஜ், தினேஷ் குமார், மணிவண்ணன் உட்பட அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி வழங்கப்பட்டிருக்கிறது.  

ஒருவர் நீக்கப்பட காரணம் என்ன?

ஒருவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 12 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த சம்பவ இடத்திலேயே இல்லை என்பது போலீசார் தரப்பில் நிரூபிக்கப்பட்டதால் தற்போது இந்த வழக்கில் இருந்து அவர் விடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் குற்றச்சாட்டப்பட்ட 10 பேரும் தேர்தல் முன் விரோதம் காரணமாகவே சுபாஷை வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக வாக்குமூலம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அந்த ஒரு நபருக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பதாலே தற்போது அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். செய்யப்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி... ஜம்மு-காஷ்மீர் மருத்துவ கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share