டெல்டாவிலும் அதிமுக வாஷ் அவுட்..!! EPS செல்லாக்காசா.?! சி.வி. சண்முகம் மீண்டும் தாக்கு.!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை தாக்கி பேசினார்.
எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கால் தான் 47 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றதாக அதிமுக கொறடா அக்ரிகிருஷ்ணமூர்த்தி பேசியதற்கு சிவி சண்முகம் பதிலடி கொடுத்தார். ஏழு மாவட்டங்களில் மூன்று தொகுதிகளில் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த செல்வாக்கால் அதிமுக வென்றதாக கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார். வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம்… தோற்றால் மாவட்ட செயலாளர் காரணமா என்று கேட்டார்.
47 தொகுதிகளில் மட்டும் தான் வெல்ல முடிகிறது என்றால் ஏன் மீதமுள்ள தொகுதிகளில் இபிஎஸ் செல்லாக் காசா என்று கேட்டார். கேபி முனுசாமி சட்டமன்றத் தேர்தலில் தோற்றத்திற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று வரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை என்றும் தென் மாவட்டத்திலும் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு இல்லையா என்று கேள்வி எழுப்பினார். வடமாவட்டங்களில் அதிமுகவின் வெற்றிக்கு காரணம் பாமக தான் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சிவி சண்முகம், கிருஷ்ணகிரியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கேபி முனுசாமி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றார் என்றும் கேட்டுள்ளார். நீ நான்காம் தேதி முதல் உதயநிதிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே புதிய உறவு ஏற்பட்டதாக விமர்சித்த சிவி சண்முகம், எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் எங்கும் கூறவில்லை என்றார். டெல்டாவிலும் அதிமுக துடைத்தெறியப்பட்டுள்ளது என்று கூறினார். திமுகவுக்கு நாங்கள்தான் கூட்டணி பேசினோம் என சொல்வது ஜெப காலத்தில் வடிகட்டன போய் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... தமிழகம் முழுவதும் அதிமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக வேண்டும் என்று தானே கூறியதாகவும் ஆனால் அவரை முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களையே அழைக்காமல் வேண்டப்பட்ட ஆட்களை மட்டும் அழைத்து தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துவதாகவும் தைரியம் இருந்தால் எங்களை அழைத்து கூட்டத்தைக் கூட்டுமாறும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்தார்.
இதையும் படிங்க: சென்னை வந்த அமித் ஷா..! விமான நிலையத்தில் நேரில் சந்தித்த இபிஎஸ்..!பரபரக்கும் தமிழக அரசியல்.!