×
 

இறந்தவர்கள் பெயர் நீக்க திமுகவுக்கு என்ன பயம்? CV சண்முகம் சரமாரி கேள்வி..!

இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு திமுகவிற்கு என்ன அச்சம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார்.

பீகாரை தொடர்ந்து தமிழக முற்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. படிவங்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. படிவங்களில் குளறுபடிகள் இருப்பதாகவும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவசர அவசரமாக வாக்காளர் திருத்த பணிகளை மேற்கொள்வது ஏன் என்றும் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க திமுகவினரே வாக்காளர் பட்டியல் படிவங்களை நிரப்பி விடுவதாக அதிமுக குற்றம் சாட்டை வருகிறது. இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திமுகவிற்கு என்ன அச்சம் இருக்கிறது என்றும் ஏன் முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுகிறார் எனவும் அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் கொடுத்த பிறகு சி.வி சண்முகம் இவ்வாறு தெரிவித்தார். புகார் கடிதம் கொடுத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவங்களை BLO களிடம் இருந்து திமுகவினரே பறித்துச் சென்று நிரப்பி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாக குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயரை இருக்க வேண்டும், யார் யார் பெயர் நீக்கப்பட வேண்டும் என்பதை திமுகவினரே முடிவு செய்கிறார்கள் என்றும் தேர்தல் ஆணையத்தின் அத்தனை அதிகாரங்களையும் அவர்களே எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் சட்டவிரோதமாக திமுகவினர் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: உதய் சோசியல் மீடியாவில் கிளுகிளுப்பு படங்கள்... "சொந்த மகனை திருத்த துப்பில்ல..." - ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சி.வி.சண்முகம்...!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 300க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும், கிட்டத்தட்ட மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதே போன்ற ஆதாரங்களை தான் வெளியிட்டு வாக்குத்திருட்டு புகார்களை கூறியிருந்தார் என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: #BREAKING பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு... சி.வி.சண்முகத்திற்கு காலையிலேயே நிம்மதி போச்சு... பறந்து வந்த அதிர்ச்சி செய்தி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share