×
 

பாலைவனமாகும் டெல்டா...மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருமா?... இன்று அவசரமாக கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்...!

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக டெல்லியில் இன்று அவசரமாக கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் இன்று அவசரமாக நடைபெறுகிறது.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 88 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணையைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்டா பகுதிகளில் குருவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

இந்த நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்கும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், காவிரியில் நிலுவையில் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு, வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தன.

ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்தாத கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, வழக்கை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: முழு கொள்ளளவை எட்டியது கபினி அணை... தமிழகத்தை நோக்கி 27 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share