×
 

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! 10 ஊர்களில் கனமழை! லிஸ்ட் இதோ!

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 5ஆம் தேதி திங்கட்கிழமை மாலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

ஜனவரி 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற இது, தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 7 நாட்களுக்கு அடித்து ஊற்றப்போகும் மழை! தமிழகம், புதுச்சேரிக்கு அலர்ட்! வானிலை அப்டேட்!

சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கில் சுமார் 1,270 கிலோமீட்டர் தொலைவில் இது மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தப் புயல் சின்னத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்தப் பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து இதன் நகர்வை கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: மக்களே உஷார்! இடி, மின்னலுடன் கொட்டக் காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share