×
 
☰

#BREAKING “வந்துட்டான்யா... வந்துட்டான்யா...” - உருவானது ‘அர்னாப் புயல்’... தமிழகத்திற்கு பேராபத்தா? 

நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவித்துள்ளார். 

இன்று காலை 5.30 நிலவரப்படி மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் அறிவித்துள்ளார். 

அர்னாப் புயல் படிப்படியாக வலுவடைந்து தீவிரப்புயலாகவும், மிக தீவிரப்புயலாகவும் வலுப்பெறும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் படிப்படையாக மழை குறையும் என்றும் ஹேமச்சந்தர் கணித்துள்ளார். மேலும் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:  வங்கக்கடலில் கடந்த 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. அது மேலும் வலுப்பெற்று, கடந்த 24ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

கடந்த 26 மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது அர்னாப் புயலாக மாறியுள்ளது.

குறிப்பாக, இந்தப் புயல் தொடர்ந்து வலுப்பெற்று நகர்ந்து, நாளை காலை மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று, நாளை மிகத் தீவிரப் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, அக்டோபர் 28ஆம் தேதி காலை ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் புயல் நிலைகொள்ளும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 28ஆம் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா முதல் விசாகப்பட்டினம் வரையிலான பகுதிகளில் மிகத் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 140 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும், சில மாவட்டங்களில், குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்னாப் புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா பகுதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share