×
 

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த சோதனை... பால்கோவா உற்பத்தியை நிறுத்தும் அபாயம்...!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பால்கோவா உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஹோட்டல்கள் மூடப்படுவதால் அது சார்ந்த தொழில்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் - -அமெரிக்கா -இஸ்ரேல் போர் காரணமாக உலகம் முழுவதிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் வர்த்தக பயன்பாட்டிற்காக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது அவ்வாறு ஒரு சில இடங்களில் கிடையாது கேஸ் சிலிண்டர் கிடைத்தாலும் அதிக அளவு டெபாசிட் கேட்பதால் சிறு மற்றும் குறு வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நினைவக்கு வருவது பால்கோவா முன்னொரு காலங்களில் விறகடுப்பு மூலம் பால்கோவா தயாரிப்பு நடைபெற்று வந்த நிலையில் தேவை அதிகரித்ததால் சிலிண்டர் மூலம் பெரிய அளவில் பால்கோவா தயாரிப்பு நடைபெற்று வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக இருப்பு இருக்கக்கூடிய சிலிண்டர்கள் மூலமாகவும், சந்தையில் கிடைக்கப்பெற்ற ஓரளவு சிலிண்டர்கள் மூலமாகவும் பால்கோவா உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் தற்போது வர்த்தக சிலிண்டர் விநியோகத்திற்கு கட்டுப்பாடு என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பால்கோவா தொழில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரம் லிட்டர் கணக்கில் பால் வாங்கி பால்கோவா உற்பத்தி செய்த நிலையில் தற்போது சில நூறு முட்டல்கள் மட்டும் பெறப்பட்டு பால்கோவா தயாரிப்பு நடைபெற்று வருகிறது இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடைகளுக்கு வந்து பால்கோவா கேட்கும் போது அவர்களுக்கு இல்லை என்ற பதில் சொல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க சுற்றுலா ஸ்தலமாக விளங்கக்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையை கடக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இங்கு செயல்பட்டு வரும் இரவு நேர கடைகளில் தங்களின் இரவு உணவை ருசித்து வந்தனர்.தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக சிலிண்டர் தட்டப்பாடு காரணமாக பெரும்பாலான இரவு உணவகங்கள் மூடப்பட்டன. இயங்கி வரும் ஒரு சில ஹோட்டல்களும் வாரத்திற்கு இரு நாள் விடுமுறை என்ற அடிப்படையில் ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இக்கடையிலுக்கு விநியோகிக்கப்படும் வாழை இலை கட்டு விலை மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது 800ரூபாய்க்கு விற்ற மாலை கட்டு தற்போது 100 ரூபாய் 150 ரூபாய்க்கு விற்கப்படுவதால் வாழையிலை கடைக்காரர்கள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இக்கட்டில் இந்தியாவுக்கு கைகொடுத்த ரஷ்யா!! 6 கோடி கச்சா எண்ணெய் பேரல்கள் அனுப்ப ஒப்பந்தம்!

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஒருபுறம் இருந்தாலும் மாற்றி எரிசக்தியை தேடி ஹோட்டல் கடைக்காரர்கள் மற்றும் பால்கோ உற்பத்தியாளர்கள் செல்ல துவங்கி உள்ளனர்.இதன் காரணமாக இங்கு இயங்கி வரும் அடுப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் விறகு அடுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக குறைந்த அளவு விறகு கொண்டு இயக்கயக்கூடிய அடுப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் வெல்டிங் தொழிற்சாலைகளில் அதிக அளவு அடுப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது இங்கு தயாரிக்கப்படும் மருத்துவர் அண்டை மாநிலங்களான கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பால்கோவா தயாரிப்பாளர்கள் அளித்துள்ள பேட்டியில், தாங்கள் அதிகளவு பால் கொள்முதல் செய்து பால்கோவா உற்பத்தி செய்து வந்ததாகவும் தற்போது விறகடுப்பு மூலம் பால்கோவா உற்பத்தி செய்யப்படுவதால் 100 கிலோ வரை பால்கோவா தயாரித்து வந்த நிலையில் தற்போது வெறும் 10 கிலோ மட்டுமே தயார் செய்து வருவதாகவும் மேலும் பால் கொள்முதலை குறைத்துள்ளதாகவும் இனிவரும் காலங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு சரியானாலும் பால் கொள்முதலில் தங்களுக்கு மிகப்பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் ஏனென்றால் தற்போது கொள்முதல் குறைத்துள்ள நிலையில் பால் உற்பத்தியாளர்கள் தங்களின் பாலை வேறு வழிகளில் வினியோகம் செய்து வருவதாக கூறியுள்ளனர். 

இதையும் படிங்க: பாக்., அழுத்தத்திற்கு பணிந்ததா ஈரான்?! காஷ்மீர் விவகாரம்!! இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த பதிவுகள் அழிப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share