×
 

தரமற்ற தடுப்பணை... விவசாயிகள் வயித்துல அடிக்காதீங்க! நயினார் ஆவேசம்..!

தரமற்ற தடுப்பணையால் விவசாயிகள் தத்தளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

தடுப்பணைகள் என்பவை மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டமைப்பு. இவை ஆறுகள் அல்லது நீரோடைகளின் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்தவும், நீரைச் சேமித்து வைக்கவும் கட்டப்படுகின்றன.

தடுப்பணைகள் பல்வேறு நோக்கங்களுக்காக உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. இவை விவசாயம், மின்சார உற்பத்தி, வெள்ளக் கட்டுப்பாடு, குடிநீர் வழங்கல் மற்றும் உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய பங்காற்றுகின்றன. 

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் அழகிரிபுரம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்து சீர் செய்யப்படாமல் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தூக்கு கயிறோட வந்தாரா? இல்ல அடிச்சு கொன்னுட்டாங்களா? சந்தேகம் எழுப்பிய நயினார்..!

சீரமைக்க திமுக அரசு அலட்சியப்படுத்துவதால், பயிர் பாசனத்திற்கு பயன்பட வேண்டிய மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதாகக் கூறி அப்பகுதி விவசாய பெருமக்கள் ஆற்றில் இறங்கி நின்று போராடுவது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். 

தரமற்ற முறையில் தடுப்பணையைக் கட்டியது மட்டுமன்றி ஊருக்கே படியளக்கும் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து திமுக அரசு அவர்களின் வயிற்றில் அடிப்பதாக கடும் குற்றச்சாட்டை நயினார் நாகேந்திரன் முன் வைத்தார்.

ஏற்கனவே பராமரிப்பற்ற அரசு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாலும், முறையாக தூர்வாராமல் வறண்டு கிடக்கும் பாசனப் போக்குவரத்தால் பயிர்கள் கருகுவதாலும் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது முறையல்ல எனவும் தெரிவித்தார். 

அழகிரிபுரம் விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவற்றை நிறைவேற்றுவதோடு, தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுல காவல்துறைக்கே பாதுகாப்பு இல்ல! முதல்வரை நார் நாராக கிழித்த நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share