×
 

மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சிவகங்கையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சந்திரனுக்கு ஐந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி பகுதியில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வழக்கில் குற்றவாளியான 45 வயதான சந்திரன் என்பவருக்கு சிவகங்கை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஐந்து மரண தண்டனைகள் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த சம்பவம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையின் கொடூரத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. சந்திரன், அந்த பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர். அவர், 9 முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளை வீடியோ கேம் கற்றுத் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவம் தனித்தனியாக ஐந்து சிறுமிகளுக்கு நடைபெற்றிருந்தது.

சிறுமிகள் பயந்து, உடனடியாக வெளியில் சொல்லாமல் இருந்த நிலையில், பின்னர் அவர்களின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த பெற்றோர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். திருப்பத்தூர் மகளிர் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிபதி கோகுல் முருகன் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதையும் படிங்க: தி. மலையில் அதிர்ச்சி சம்பவம்..! 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை..! தொடர் விசாரணை..!!

விசாரணையின் போது, சாட்சியங்கள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் சிறுமிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் துல்லியமாக ஆராயப்பட்டன. குற்றவாளி சந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கருதியது. ஒவ்வொரு சிறுமியின் மீதும் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு தனித்தனியாக ஐந்து மரண தண்டனைகள் விதிக்கப்பட்டன.

மேலும், சில குற்றங்களுக்காக நான்கு ஆயுள் தண்டனைகளும், கூடுதலாக 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. அபராதமாக ரூ.11,000 கட்ட உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பில் மிக முக்கியமான அம்சம், பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ.35 லட்சம் இழப்பீடு அரசு சார்பில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: "சாகும்வரை ஆயுள் தண்டனை"..!! வளர்ப்பு மகளையே வன்கொடுமை செய்த கொடூர தந்தை..! முக்கிய உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share