பூதாகரமாக வெடிக்கும் பாலியல் சம்பவம்! தெய்வ சாயலை கட்சி பொறுப்பில் இருந்து விடுத்த திமுக
இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்த விவகாரம் வீரியம் எடுக்கும் நிலையில் திமுக கட்சி பொறுப்பில் இருந்து தெய்வ சாயல் நீக்கப்பட்டு உள்ளார்.
இளம் பெண்களுக்கு உதவுவது போல் பழகி, திமுக நிர்வாகி தெய்வ சாயல் என்பவர் பல பெண்களுக்கு உதவுவது போல் நடித்து ஏமாற்றி இருப்பதாகவும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் டிஜிபி அலுவலகத்தில் இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார். தெய்வ சாயலை காவல்துறையினர் தப்பிக்க வைக்க முயற்சி செய்வதாகவும், திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாக இருக்கும் இவர் மீது புகார் அளித்தாலும் காவல்துறையினர் ஏற்க மறுப்பதாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த பெண் குற்றம் சாட்டினார். 20 பெண்களை அவர் ஏமாற்றி இருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த நிலையில் தன்னை குற்றவாளி போல் நடத்துவதாக அந்த இளம் பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அழுது கொண்டே அந்தப் பெண் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்பு இருந்த தைரியம் தற்போது தனக்கு இல்லை என்றும் தான் மறைமுகமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும், தற்கொலை செய்து கொள்வேனோ என்ற பயம் வந்துவிட்டதாகவும் அந்த பெண் கண்ணீர் மல்க பேசி இருந்தார்.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!
இந்த நிலையில், தெய்வ சாயல் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: இரையாக்கப்படும் இளம்பெண்கள்.. ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! "டம்மி அப்பா" - ஸ்டாலினை வெளுத்த இபிஎஸ்!