×
 

காஷ்மீர் டு டெல்லி... செங்கோட்டை அருகே வெடித்த காரின் பகீர் பிண்ணனி ...!

டெல்லியில் குண்டு வெடிக்கப்பட்ட கார் கடைசியாக ஹரியானாவில் உள்ள பரிதாபாதில் இருந்து கொண்டுவரப்பட்டது தெரிய வந்திருக்கிறது. 

டெல்லியில் குண்டு வெடிக்கப்பட்ட கார் கடைசியாக ஹரியானாவில் உள்ள பரிதாபாதில் இருந்து கொண்டுவரப்பட்டது தெரிய வந்திருக்கிறது. 

நேற்று டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 க்கு வெளியே நகரும் காரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 9 பேர் மரணமடைந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.என்.ஐ.ஏ, என்.எஸ்.ஜி, டெல்லி போலீசார் ஆகிய விசாரணை அமைப்புகள் புலன் விசாரணையை தொடங்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். எல்லா கோணங்களிலும் விசாரணை நடப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் பல்வேறு பின்னணி தகவல் வெளியாகி இருக்கிறது. மிக முக்கியமாக 2014ஆம் ஆண்டிலிருந்து இந்த கார் நான்கு முறை முறைக்கேடாக விற்கப்பட்டிருப்பது தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: #BREAKING நாடே பேரதிர்ச்சி... செங்கோட்டை அருகே மிகப்பெரிய குண்டுவெடிப்பு...!

 அதாவது நான்கு முறையும் இந்த கார் முறைப்படியாக அந்த நேம் டிரான்ஸ்பர் என்று சொல்வார்கள். ஒரு காரை இன்னொரு நபருக்கு விற்கிறோம் என்றால், அந்த கார் வாங்கும் நபரின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் தொடர்புடைய காரானது, 2014ம் ஆண்டில் இருந்து நான்கு முறை கைமாறினாலும், அது முறைப்படியாக பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. 

கடைசியாக தாரிக் என்ற நபருக்கு இந்த கார் பரிதாபாத்தில் இருக்கக்கூடிய ஒரு கார் விற்பனையாளர் மூலமாக விற்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக நேற்று மதியம் இந்த குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பாக, நேற்று மதியம் வடக்கு டெல்லி பகுதியில் இந்த கார் பல இடங்களில் சுற்றி திரிந்திருப்பதை அதிகாரிகளும், சிசிடிசி காட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

நேற்று மதியம் ஒரு மணி முதல் கார் வடக்கு டெல்லியின் பல்வேறு இடங்களில் தென்பட்டிருக்கிறது. இதுவரை டெல்லி போலீசார் மற்றும் இதர விசாரணை அமைப்புகள் சுமார் 50 சிசிடிவிகளில் இந்த கார் பல்வேறு இடங்களில் இருப்பதை உறுதி செய்திருக்கின்றன. குறிப்பாக செங்கோட்டை பகுதிக்கு அருகில் தான் இந்த குண்டுவெடிப்பானது நடந்தது. அந்த பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளில் இந்த கார் இருந்திருப்பதை தற்போது அதிகாரிகள் உறுதி செய்திருக்கின்றனர். 

மிக முக்கியமாக இந்த கார் எந்த வழியாக வடக்கு டெல்லி பகுதிக்குள் நுழைந்தது, எங்கெங்கெல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, என்பதை தற்போது உறுதி செய்வதற்காக வடக்கு டெல்லி மற்றும் எல்லை பகுதிகளில் சிசிடிவி காட்சிகளானது தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த கார் எங்கிருந்து டெல்லிக்குள் நுழைந்தது? எவ்வாறு வடக்கு டெல்லி மற்றும் செங்கோட்டை பகுதிகளில் கார் நுழைந்தது? என்பதை உறுதி செய்வதற்கான பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் போலீஸ் குவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share