×
 

உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் - திருமணம் மேடையில் உதயநிதி ஸ்டாலின் சூசன புரட்சி.. 

உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.. குழந்தைக்கு தமிழில் பெயர் வையுங்கள்.. என்ற துணை முதலமைச்சர் உதயநிதியின் கருத்து நெட்டிஷன்களிடையே பேசு பொருளாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  72-வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் 72 ஜோடிகளுக்கு திருமணம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடத்தி வைக்கப்பட்டது. இது மட்டும் இன்றி திருமணம் ஆன 72 ஜோடிகளுக்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. 

முன்னதாக சீர்வரிசை பொருட்களை துணை முதலமைச்சர் உதயநிதி மணமக்களிடம் வழங்கி வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து திருமணம் மேடையில் பேசிய உதயநிதி, மணமக்களை வாழ்த்தி மத்திய அரசை சாட தொடங்கினர்..

நாடெங்கும் குடும்ப கட்டுப்பாட்டை அமல்படுத்திய மத்திய அரசு, அதற்கான வெகுமதியையும், மரியாதையையும் கொடுக்க தவறியுள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய அரசு அமல்படுத்திய திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்திய மாநிலங்களில் முதன்மை வகிக்கிறது தமிழகம்.

இதையும் படிங்க: ரயில் மூலம் திரும்ப முடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்.. உதவிக்கரம் நீட்டிய உதயநிதி..

ஆனால் அதற்காக தமிழகம் வஞ்சிக்கவும் தண்டிக்கப்படுகிறது என்றே குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தொகுதி மறுவரையறையை மத்திய அரசு நூதன முறையில் கொண்டு வருகிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கடந்த 10 நாட்களாக தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால் தமிழகத்தில் எட்டு தொகுதிகள் குறைந்து மொத்தமாக 31 தொகுதிகள் மட்டுமே பங்கு வகிக்க கூடும்.  ஆனால் இதுவே குடும்ப கட்டுப்பாட்டை சரியாக செய்யாத விழிப்புணர்வு ஏற்படாத மாநிலங்கள் மிகுந்த பலன்களை அடையப் போகின்றன. அதாவது வட மாநிலங்களில் 100 தொகுதிகள் கூடுதலாக அமையவிருக்கின்றன.

 இதனால் நம்முடைய உரிமைகளை பெற முடியாத சூழல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், இங்குள்ள திருமண ஜோடிகள் உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தமிழில் பெயர் வையுங்கள் என மத்திய அரசின் அனைத்து இடற்படுகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் சூசனமாக கருத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமெரிக்க பங்குச்சந்தை மோசடியில் அதானிக்கு நோட்டீஸ்..! குஜராஜ் நீதிமன்றத்துக்கு மத்திய சட்டத்துறை பரிந்துரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share