×
 

திமுகவை பாராட்ட போட்டி போடும் பாமக எம்எல்ஏக்கள்… துணை முதல்வர் உதயநிதி பேச்சு

பாமக எம்எல்ஏக்கள் திமுகவை போட்டி போட்டுக் கொண்டு பாராட்டுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இது அரசு விழாவா அல்லது மகளிர் விழாவா என்று அளவுக்கு எழுச்சியோடு மகிழ்ச்சியோடு பெண்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த விழாவிற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருப்பதாகவும் அவர்கள் நம்முடைய இயக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது நம்முடைய கூட்டணியில் கூட இப்போது இல்லை என்று குறிப்பிட்டு பேசினார். 

சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருண் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகிய இரண்டு பேரும் சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருப்பதாகவும் அதற்கு பாராட்டுகளை போட்டி போட்டுக் கொண்டு கூறி வருவதாகவும் தெரிவித்தார். இருவரும் ஒற்றுமையுடன் பாராட்டு இருக்கிறார்கள் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின், அவர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஒற்றுமையோடு மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக அரசின் Dr. ராதாகிருஷ்ணன் விருது... நல்லாசிரியர்களுக்கு வழங்கி கவுரவிக்கும் துணை முதல்வர்!

பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி தரப்பு ராமதாஸ் தரப்பு என இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் முற்று பெறாத நிலையில், ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொய் செய்தி பரப்புறதுதான் பாசிச கும்பலின் முழு நேர வேலை! விளாசிய உதயநிதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share