×
 

அந்த வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லி... விஜயை மீண்டும் சீண்டும் உதயநிதி ஸ்டாலின்...!

பாஜகவின் புதிய அடிமை என தமிழக வெற்றிக் கழகத்தை மீண்டும், மீண்டும் உதயநிதி ஸ்டாலின் சீண்டியுள்ளார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி மகன் ஸ்ரீகாந்த் மணமகள் பிரியதர்ஷினி ஆகியோர் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் நடத்தி வைத்து மணமக்களை ஆசீர்வாதம் செய்தார்.

பின்னர் திருமண நிகழ்ச்சி மேடையில் பேசுகையில்:- முழுசாக மேடைக்கு வந்து செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்னுடைய கைகளுடன் இந்த நிகழ்ச்சி மேடைக்கு நான் வருவேனா என்ற சந்தேகம் இருந்தது. கை நம்மை விட்டுப் போகாது. நான் என்னுடைய கையை கூறினேன். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை கூறினேன். 

அடிமைகளுக்கும், பாசிஸ்களும், சங்கிகளும் இந்த அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும். எப்படியாவது தமிழ்நாட்டை அபகரிக்க வேண்டும். கைப்பற்ற வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டுகின்றனர்.  ஒன்றிய பாசிச பாஜகவுக்கு ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி என்ற அடிமை சிக்கி உள்ளார். இன்று அந்த அடிமை பத்தவில்லை என்று புது அடிமை கிடைக்குமா என பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.  புது அடிமை நிச்சயமாக கிடைப்பார்கள். ஆனால், எத்தனை அடிமைகள் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் கடைசி திமுக தொண்டர் இருக்கும்வரை பாசிச பாஜக தமிழ்நாட்டில் காலடி வைக்க முடியாது. கடைசி தொண்டன் கூட உங்களை ஓட ஓட விரட்டுவான்.

இதையும் படிங்க: அச்சச்சோ...! ரஜினி ரூட்டை பாலோப் பண்ண பார்க்கும் விஜய்... எடப்பாடி, அமித் ஷா தலையில் இறங்கியது இடி...!

கல்வி உரிமை, மாநில உரிமை பறிக்கப்படுகிறது. 39 தொகுதி 32 தொகுதியாக குறைக்க திட்டம் நடக்கிறது. புதிய கல்வி கொள்கை கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை தமிழ்நாட்டில் எப்படியாவது திணிக்க வேண்டும் என பாஜக அரசு கொண்டு வருகிறது.  மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் உள்ளது. இதனால்  தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதி 2500 கோடியை நம்முடைய வரி பணம் தர மாட்டேன் என கூறினார். புதிய கல்வி கொள்ளை மூலமாக இந்தியை திணிக்க முயற்சிக்கிறீர்கள் 

ரூ.2500 கோடி கொடுத்தால் மட்டுமில்லை பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை நுழைய விட மாட்டேன் என முதல்வர் கூறுகிறார். ஒன்றிய அரசு அறிவிக்கும் திட்டங்கள் தமிழ்நாடு ஏற்றுக்கொள்கிறதா? என அனைத்து மாநிலங்களும் பார்த்து வருகிறது. பஞ்சாப் முதலமைச்சர் நமது காலை உணவு திட்டத்தை பார்த்துவிட்டு செல்கிறார். அவர் நமது கூட்டணி கட்சி கிடையாது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். 15 நாட்களுக்கு முன்பு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தமிழக புதுமை பெண் திட்டம் மிகச்சிறந்த திட்டம் எனக் கூறி செல்கிறார். இந்த திட்டங்களை தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தப் போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக முதலமைச்சர் செயல் பட்டு கொண்டிருக்கிறார். 2 கோடி பேர் நமது உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். சங்கிகளும் பாசிஸ்டுகளும் தமிழ்நாட்டை கைப்பற்ற வேண்டும் என நினைத்து வருகின்றனர். அது தவிடு பொடி ஆக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்ஜிஆர் மறந்துவிட்டார் ஏற்கனவே ஜெயலலிதா மறந்தனர். நீலகிரி நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அவருக்கு மாலை அணிவித்த பின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததாக கூறுகிறார். கீழே இருக்கும் தொண்டன் கூறுகிறான் அது எம்ஜிஆர் சிலை என்று.எடப்பாடிக்கு அமித்ஷா மூஞ்சி மட்டுமே நினைவில் இருக்கிறது. 
இந்த திருமண மணமக்களுக்கு மட்டுமல்லாமல் முதல்வர் எங்கு சென்றாலும் கூறுவது என்னவென்றால் உங்களுக்குப் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி தமிழ் பெயர் வைக்கவும் என்பதே" எனக்கூறினார். 
 

இதையும் படிங்க: “ஆப்பு அண்ட் ஆதரவு” ஒரே இடத்தில் இருந்தா?... நொந்து போன விஜய்... சல்லி சல்லியாய் நொறுங்கும் இமேஜ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share