×
 

மிஸ் ஆகக் கூடாது... மக்கள் SAFETY தான் முக்கியம்... துறை சார்ந்த அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை...!

பருவமழை எதிர் கொள்வது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன் தீவிரம் தற்போது அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தமிழக முழுவதும் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு குடியிருப்புகள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுவதை தடுக்க தமிழக அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க அதிகாரிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்குச் சென்று தண்ணீர் தேங்குவது தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக கூறிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பருவமழை தொடர்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் அடிப்படையில், நடந்துள்ள பணிகள் குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மாநகராட்சி, நெடுஞ்சாலை, குடிநீர் வழங்கல், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரூ.156 கட்டணம்... பெண்கள் தான் டார்க்கெட்... ஆன்லைனில் பாகிஸ்தான் செய்யும் படு கீழ்த்தரமான வேலை...!

குறிப்பாக, பழுதடையும் சாலைகளை உடனுக்குடன் சரி செய்யவும், மின்சார பாக்ஸ்கள், கேபிள்களை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறினார். இயற்கைச் சவாலை கூட்டுமுயற்சியுடன் எதிர்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மிரட்டப்போகுது மழை... உஷார் மக்களே... 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share