×
 

"எடப்பாடி புதுப்புது கால்களாக தேடி, தேடி விழுந்து வருகிறார்..." - உதயநிதி ஸ்டாலின் கிண்டல் ...!

தமிழகத்தில் திமுக ஆளும் கட்சி. ஆனால் இந்தியா முழுவதற்கும் நாம்தான் சிறந்த எதிர்க்கட்சி என உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

இன்று நாடு முழுவதும் பாசிச பாஜகவிற்கு பதற்றத்தை கொடுக்கக்கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது. தமிழகத்தில் திமுக ஆளும் கட்சி. ஆனால் இந்தியா முழுவதற்கும் நாம்தான் சிறந்த எதிர்க்கட்சி என உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான புதிய தேர்வு நிலை பேரூராட்சி கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே கலைஞர் அரங்கத்தினை திறந்து வைத்தவர் அங்கு முன்னாள் முதல்வர் மு கருணாநிதி மற்றும் முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன் சிலைகளை திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ஒரு கட்சிக்கு நல்ல தலைமை, ஆழமான அடிப்படைக் கொள்கை, வழுவான கட்டமைப்பு என்ற 3 விஷயங்கள் இருந்தால் தான் அந்தக் கட்சி மக்களால் ஏற்று கொள்ளப்பட்டு வளர்ச்சி பெற முடியும் என அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: "புதுசா கட்சி ஆரம்பிச்ச உனக்கே இவ்வளவு அதப்புன்னா... எங்களுக்கு எவ்வளவு இருக்கும் ..." - மீண்டும் விஜய்யை சீண்டிய உதயநிதி...!

75 ஆண்டுகள் கடந்தும் திராவிட முன்னும் முன்னேற்றக் கழகம் வலுவான கொள்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பேரரிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற வழுவான தலைமை இன்றும் உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரு ஆண்டுகள் இருந்த பேரறிஞர் அண்ணா யாராலும் மாற்ற முடியாத மறுக்க முடியாத மூன்று திட்டங்களை கொண்டு வந்தார். அதில் ஒன்று சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிட்டார்.

இரண்டவதாக சுயமரியாதை திட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் தந்தார். 3 வதாக இந்திக்கு தமிழ்நாட்டில் இடமில்லை, தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் என கொண்டு வந்தார். இந்த மூன்று திட்டத்தினை எந்த கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது. 

SIR மூலம் திமுக ஆதரவு வாக்குகளை நீக்க பார்க்கின்றனர். குறிப்பாக திமுக ஆதரவாக உள்ள சிறுபான்மையினர், பெண்கள், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்கி விட்டால் கூட்டணியில் ஜெயித்து விடலாம் என ஒன்றிய பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு பூத்திலேயும் கடைசி திமுக வாக்காளர்கள் இருக்கும் வரை ஒரு தகுதியான வாக்காளர்களையும் நீக்கி, நீங்கள் வெற்றி பெற முடியாது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் SIR-யை ஆதரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அதிமுக SIR-யை ஆதரிக்கின்றனர். 

இன்று மு.க.ஸ்டாலின் அவர்களை இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என்றும், அதிமுகவை, பாஜகவின் No 1 அடிமைகள் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் கேலி பேசுகின்றனர்.

 பார்க்கும் கால்களை எல்லாம் கீழே விழுந்து வணங்கும், எடப்பாடி இப்போது புது கால்களை தேடி தேடி விழுந்து கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட அடிமை இப்படிப்பட்ட அடிமைகளை தமிழக அரசியல் இருந்து விரட்ட வேண்டும். அதுதான் தமிழகத்தில் எதிர்காலத்திற்கு நாம் செய்யக்கூடிய கடமை என்றார்.

இன்று நாடு முழுவதும் பாசிச பாஜகவிற்கு பதற்றத்தை கொடுக்கக்கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது. தமிழகத்தில் திமுக ஆளும் கட்சி. ஆனால் இந்தியா முழுவதற்கும் நாம்தான் சிறந்த எதிர்க்கட்சி. 

பாசிச பாஜகவை விரட்ட வேண்டும் என்றால் அடுத்த 4 மாதங்கள் கடுமையாக உழைத்து 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: "உதயநிதி மீதான என் நம்பிக்கை..." - முதல்வர் பேச, பேச கண் கலங்கிய துணை முதல்வர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share