×
 

நிதி மோசடி வழக்கு..! தேவநாதன் ஜாமின் மீண்டும் தள்ளுபடி..! ஹைகோர்ட் கறார்..!

நிதி மோசடி வழக்கில் கைதாகி உள்ள தேவநாதனுக்கு மீண்டும் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது.

இந்த நிலையில், தேவநாதன் யாதவ், குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிதி நிறுவனத்துக்கு எதிராக சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும், பணபலம் மற்றும் அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதால் ஜாமீன் கொடுத்தால் மக்களுக்கு பணம் கிடைக்காது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி கூறினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், இந்த வழக்கின் விசாரணைக்கு தேவநாதன் யாதவ் உள்ளிட்ட மனுதாரர்கள் சரியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் தேவநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

 வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்ற காவல்துறை என் வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்தார். நிதி மோசடி வழக்கில் கைதாகி உள்ள தேவநாதன் யாதவியின் அனைத்து சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 100 கோடி ரூபாயை செலுத்தவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் ஜாமீன் கேட்டு தேவநாதன் மனு தாக்கல் செய்தார். அப்போது, சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க தயாராக இருக்கிறேன் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தேவநாதன் யாதவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் எதையும் தேவநாதன் நிறைவேற்றவில்லை என முதலீட்டாளர்கள் சங்கம் வாதிட்டது. தேவநாதனின் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதன் அடிப்படையில் தேவநாதன் யாதவ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: ரவுடி வெள்ளை காளிக்கு ஸ்கெட்ச்..! ஆறு பேருக்கு போலீஸ் கஸ்டடி... நீதிமன்றம் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share