×
 

டி.ஜி.பி.யின் அதிரடி உத்தரவு: அமலாக்கத்துறை கடிதம் கசிந்த விவகாரம் - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறை டிஜிபிக்கு அமலாக்கத்துறை (ED) எழுதிய ரகசியக் கடிதம் ஒன்று வெளியான விவகாரம் தற்போது சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றித் தமிழகக் காவல்துறை தலைவரான டி.ஜி.பி  உத்தரவிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை எழுதியிருந்த இந்தக் கடிதத்தைப் பயன்படுத்தி, பல குற்ற வழக்குகள் கொண்டவரான ஆதிநாராயணன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது, "இந்த ரகசியக் கடிதம் உங்களுக்கு எப்படி கிடைத்தது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் இது குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் யாரேனும் உள்நோக்கத்துடன் இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அனில் அம்பானியின் ரூ.1,452 கோடி சொத்துகள் முடக்கம்..!! அதிரடி காட்டிய அமலாக்கத்துறை..!!

அரசு நிறுவனங்களுக்கு இடையேயான முக்கியத் தகவல்கள் கசிந்தது எப்படி, இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர்.
 

இதையும் படிங்க: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்..!! அல்-ஃபலா கல்வி குழுமத் தலைவர் அதிரடி கைது..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share