“விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காகவே...”... அரசியல் களத்தையே பரபரப்பாக்கிய தளபதி நண்பர்... முருகன் கோயிலில் வைத்து சபதம்...!
விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக பிரம்மாண்ட வெற்றி. பொன்னேரி அருகே முருகன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த நடிகர் தாடி பாலாஜி கருத்து
தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இழுபறியாக உள்ள சூழலில் நடிகர் தாடி பாலாஜி பொன்னேரி அருகே அமைந்துள்ள குமரஞ்சேரி, சிறுவாபுரி முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு செய்தார். சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், குமரஞ்சேரி அருள்மிகு குமாரசாமி கோவிலில் நடிகர் தாடி பாலாஜி சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆலய நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தாடி பாலாஜி, பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற விஜய் குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனவும், புதுச்சேரியில் வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
விஜய்க்கு சோதனைக்கு மேல் சோதனை கொடுப்பதாகவும் அவை அனைத்தையும் தாண்டி வெற்றி பெற்று வருவதாக கூறினார். விஜய்க்கு கடவுள் நம்பிக்கை அதிகம் எனவும் திருச்செந்தூருக்கு சென்று வந்துள்ளார் என்றும் நிச்சயமாக முருகன் துணை இருப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். திரைத் துறையிலும் சரி அரசியலிலும் நீண்ட சோதனைகளை சந்தித்து விட்டார் என்றும், பலருக்கு முகவரி கொடுத்துள்ளார் என்றும் அவர்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், அவப்பெயர் ஏற்படுத்தக் கூடாது என்றார்.
கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் விஜய் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இறைவன் தன்னம்பிக்கையையும் மன வலிமையையும் கொடுத்திட வேண்டும் என்றும், எல்லாரும் சப்போர்ட் பண்றாங்க அனைவரும் ஆதரவளித்து வருவதாகவும் சங்கடப்பட வேண்டாம் என்றும், உற்ற நண்பனாக தாடி பாலாஜி துணை நிற்பேன் என்றார். பெரும்பான்மை நிரூபிப்பதில் இழுபறி ஏற்பட்டு வரும் நிலையில், சட்டசபையில் தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என பலரும் கூறி வருவதாகவும், பல சோதனைகளைக் கடந்து வந்து விட்டதாகவும், கட்சி துவங்க மாட்டார், கொடி அறிமுகம் செய்ய முடியாது, மாநாடு நடத்த முடியாது, போன்ற பலவற்றை கடந்து வந்து விட்டார் என்றும் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்பார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எப்ப வேணாலும் புடுங்கிப்பாங்க..! தேவையா விஜய்..? மறுதேர்தல் கேட்கும் தங்கர் பச்சான்..!
மறைமுகமாக அவருக்கு நிறைய தடைகள் வந்து கொண்டிருப்பதாகவும், திங்கட்கிழமைக்குள் கட்டாயம் மாற்றம் நிகழும் என தாடி பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார். விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு என்றும் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது மக்கள் தீர்ப்பு எனவும் மாற்றம் நிகழும் என்றார். அமமுக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு, விஜய் வலுக்கட்டாயமாக யாரையும் இழுக்கவில்லை என்றும், யாரிடமும் சென்று விஜய் கோரிக்கை வைக்கவில்லை என்றும் அனைவரும் விருப்புடன் வருவதாக கூறினார்.
தனி ஒரு மனிதனுக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்றும், திருமாவளவன் ஆதரவு குறித்த கேள்விக்கு, வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக கூறியுள்ளதாகவும், நிச்சயம் ஆதரவு அளிப்பார் எனவும், அவருக்கும் சில அழுத்தம் இருக்கும் என்றார். கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்டது குறித்த கேள்விக்கு, ஆதரவு கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் விருப்பம் என்றும், விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக மட்டுமே அனைவரும் வருகிறார்கள் என்றும் மிகப்பெரிய வெற்றியும் விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக மட்டுமே என்றும் தாடி பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க: "விஜய் ஃபோர்ஜரி"..! அது FAKE வீடியோ..! போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன்..!!