களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!
ஜனநாயகன் திரைப்படம் கொண்டாட்ட நிகழ்ச்சி மாலை 6.30 மணியிலிருந்து, இரவு 9.30 மணி வரையும் இடைவிடாமல் நடைபெற்றது.
தருமபுரியில் ஜனநாயகன் படம் வெளியாகும் திரையரங்கில், தவெக-வினர் வான் வேடிக்கை, டிஜே நிகழ்ச்சி வைத்து கொண்டாட்டம்-ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு நடனமாடினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தருமபுரியில் படம் வெளியாகவுள்ள திரையரங்கில் தவெகவினர் வான் வேடிக்கை மற்றும் டிஜெ நிகழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இதில் இந்த நிகழ்ச்சியில் விஜய் நடித்துள்ள திரைப்பட பாடல்களை மட்டுமே ஒருங்கிணைத்து டிஜேவாக இசைத்து ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு நடனமாடி திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இதில் ஆங்காங்கே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக இடைவெளி இல்லாமல் நடனமாடினர்.
இதையும் படிங்க: "ONE LAST TIME"..! தளபதியின் கடைசி தரிசனம்... கலக்கலாக ரெடியாகும் தியேட்டர்கள்..!!
மேலும் விஜய் அரசியல் கட்சி தொடங்கியவுடன் திரைப்படம் நடிக்கப் போவதில்லை என்று அறிவிப்பு செய்து, ஜனநாயகன் படமே இறுதி படம் என தெரிவித்திருந்தார். இதனால் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு படம் நடிக்கப் போவதில்லை, இதுவே கடைசி படம் என்பதால், இந்த ஜனநாயகன் படத்தை ரசிகர்களும் தவெக தொண்டர்களும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் திரைப்படம் நடிப்பதில்லை என்ற முடிவை, மறு பரிசீலனை செய்ய வேண்டும். ரசிகர்களுக்காக ஆண்டிற்கு ஒரு திரைப்படமாவது நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனநாயகன் திரைப்படம் கொண்டாட்ட நிகழ்ச்சி மாலை 6.30 மணியிலிருந்து, இரவு 9.30 மணி வரையும் இடைவிடாமல் நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு நடனமாடி ஜனநாயகன் படத்தை கொண்டாடினர்.
இதையும் படிங்க: தெறிக்கப்போகும் 'ஜனநாயகன்' திருவிழா..!! திருப்பூரில் வெறிகொண்டு தயாராகும் பிரத்தியேக டி-ஷர்ட்..!!