×
 

2026-ல் டீ விக்க தான் போறாங்க.. திமுக கூட்டத்தில் தவெகவை கிண்டலடித்த லியோனி!

கோவையில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை பட்டிமன்ற பேச்சாளர் ஐ லியோனி கிண்டலடித்து பேசி உள்ளார்

சமீபத்தில் கோவை மாநகரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத் முகவர்கள் கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் அக் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அவரைப் பார்ப்பதற்காக காலை முதலே கால்கடுக்க வெயிலில் காத்திருந்து அவரை கண்டதும் தொண்டர்கள் உற்சாகத்தில் பூரித்தனர்.

மேலும் விஜய் நடத்திய ரோடு ஷோவை காண வழிநெடுகிலும் குவிந்த தொண்டர்கள் அவருக்கு மாலை அணிவித்தும், கட்சி துண்டு அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். இந்த பூத் கமிட்டி கருத்தரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை விஜய் வழங்கி இருந்தார்.

இதையும் படிங்க: வாட் ப்ரோ..? இ- பாஸ் பரிசோதனையை தவிர்த்த விஜய்... 'அணில்' போல தாவிய தொண்டர்கள்..!

விஜயின் வருகையால் திரும்பும் திசையெல்லாம் TVK...TVK என்ற முழக்கம் தான். கோவை ஸ்தம்பிக்க செய்த இந்த நிகழ்வை பட்டிமன்ற பேச்சாளர் ஐ லியோனி கிண்டல் அடித்து பேசி உள்ளார். பொள்ளாச்சியில் நடைபெற்ற சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய லியோனி, தமிழக வெற்றி கழகத்தின் TVK...TVK என்ற முழக்கத்தை விமர்சித்தார்.

கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்..,நான் கூறுவதை அனைவரும் சேர்ந்து திருப்பி கூற சொன்னதாகவும் தெரிவித்தார். TVK...TVK… என அனைவரையும் அவர் கூறச் சொன்னதாகவும், அது டீ விற்க டீ விற்க என்று தான் காதில் விழுவதாகவும் நக்கல் அடித்தார்.

2026 இல் நிச்சயமாக டீ விற்க தான் போகிறார்கள் என்றும் கிண்டல் அடித்து பேசி உள்ளார். அது மட்டுமல்லாது ஒரு கட்சியின் தலைவர் முன்பு ஒருவர் குத்தாட்டம் போடுவதாகவும் இதற்குப் பெயர் கட்சியா எனவும் லியோனி விமர்சித்து பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், விஜயின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் லியோனியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரையில் விஜய்! சீக்கிரம் சந்திப்போம் நண்பா, நண்பீஸ்.. செம குஷியில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share