×
 

அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவின் பின்புறம் மருத்துவக் கழிவுகள் மொத்தமாக குவித்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  திண்டுக்கல் நகர் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

 குறிப்பாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் அப்பகுதியில் கூட்டம் அதிகரித்து காணப்படும். ஒரு நாளைக்கு ஐந்து முதல் 15 வரையிலான பிரசவங்கள் இங்கு நடைபெறுவதும் வழக்கம். 

பிரசவத்திற்காக வரக்கூடிய தாய்மார்களின் உறவினர்களும்  நாட்கணக்கில் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டின் பின்பகுதியில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் விதமாக மழை போல குப்பைகள் தேங்கி வைக்கப்பட்டுள்ள
காட்சிகள் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

இதையும் படிங்க: “நள்ளிரவில் ஆபாச SMS’’... அம்பலமான கல்லூரி வார்டனின் லீலைகள்... மாணவிகளை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன கல்லூரி நிர்வாகம்...!

உணவு கழிவுகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மருத்துவக் கழிவுகள் என டன் கணக்கான குப்பைகள் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது பல நாட்கள் அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

 மருத்துவமனை நிர்வாகம் குப்பைகளை  முறையாக அகற்றாமல் வார்டில் பின்பகுதியில் கொட்டி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கடல் கடந்த காதல்..! திண்டுக்கலில் டும்... டும்..! கரம் கோர்த்த அமெரிக்க ஜோடி!”

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share