×
 

கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - சேலம் , கடலூர் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...!

திண்டுக்கல், சேலம், கடலூர் மாவட்ட பள்ளிகளில் விடுமுறை நிலவரம் குறித்து பார்க்கலாம்

கன்னியாகுமரிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு ? 

இன்று தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி உள்ளிட்ட 22 மாவடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை இன்று காலை 10 மணி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை: புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை...!

 அதேபோல கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இதுவரை நெல்லை, தென்காசி, மதுரை, கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மற்றும் தென்காசியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடலூர், சேலம், திண்டுக்கல் நிலவரம்:

தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் பூண்டி, மன்னவனூர், வில்பட்டி கிராம பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, மழைப்பொழிவை பொறுத்து பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட சரவணர் அறிவித்துள்ளார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் மழை அளவு மற்றும் மழை நீர் தேங்குவதைப் பொறுத்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர் மற்றும் சேலத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாவட்டங்களிலும் சில பகுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் புவனகிரி ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்படுகிறது என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆத்தூர் தலைவாசல் கெங்கவல்லி பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய நான்கு தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING தொடரும் கனமழை; தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... எங்கெல்லாம் கல்லூரிகளுக்கு லீவு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share