“மூழ்கும் கப்பலான பாஜகவை தூக்கும் நீர் மூழ்கி கப்பல் தான் அதிமுக...” - NDA கூட்டணிக்குள் குண்டு வைத்த திண்டுக்கல்லார்...!
கரூர் சம்பவத்திற்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது என திமுகவை புகழ்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மணிக்கூண்டில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசுகையில்:- தி.மு.க. அரசு அனைத்து வரிகளையும் உயர்த்தியது. அதேபோல் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டன. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதை மறைக்க தி.மு.க. அரசு ரூ.1,000 வழங்குகிறது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் சுமையை குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் அதிமுகவிற்கு ஆதரவு பெருகுகிறது
அதை சகித்து கொள்ள முடியாமல் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து திமுக அவதூறு பரப்புகிறது. அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல் என்று கூறுகின்றனர். அதிமுக நீர்மூழ்கி கப்பலாக இருந்து தமிழக மக்களை பாதுகாப்பாற்றும். திமுக ஆட்சியால் தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமையும்.
காங்கிரஸ் திமுகவும் கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. நடிகர் விஜய் உடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வாரிசு எடப்பாடி பழனிச்சாமி தான் என்பது நிரூபிக்கும் வகையில் அவருடைய ஆட்சியின் திறமை, நிர்வாகத் திறமை இருந்த காரணத்தினால் தான் அவருக்கு அந்தப் பெயர் கிடைத்துள்ளது. இன்னைக்கு இந்த கட்சியை வீழ்த்தி விடலாம், அழுத்தி விடலாம் என நினைத்தார்கள் எத்தனை வழக்குகள் போட்டு பார்த்தார்கள். ஆனால் தற்பொழுது அவர்களால் வேட்டி கட்ட முடியவில்லை, அண்ணா திமுக வேட்டியை மாப்பிள்ளை இனிமேல் கட்டக்கூடாது காரில் அதிமுக கொடி இருக்கக் கூடாது என கடவுள் தண்டனை கொடுத்து உள்ளதாக ஓ பன்னீர்செல்வத்தை மறைமுகமாக குற்றம் சாட்டி பேசினார்.
இதையும் படிங்க: “மோடிக்காக எங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம்னு சொல்லிடாதீங்க மா..” - பெண் வாக்காளர்களிடம் கெஞ்சிய திண்டுக்கல் சீனிவாசன்... ஷாக்கில் பாஜக...!
மாடி வீட்டும் மல்லிகைக்கும் மனம் உண்டு என சொல்வார்கள. ஏழையாகப் பிறந்து விவசாய பிறந்து மண்வெட்டி எடுத்து மண்ணை வெட்டி விவசாயம் பார்த்த குடும்பத்தில் இருந்து எடப்பாடியார் . தெய்வத்தின் அருளை மட்டுமல்ல ஜெயலலிதாவின் அருளை பெற்றுள்ளதால் நாம் எல்லாம் அவர் தலைவராக ஏற்றுள்ளோம். அண்ணா திமுக பெரிய கட்சி என்பதை தெரிந்துதான் பிஜேபி தங்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். 12 மணிக்கு வருகிறேன் என கூறிவிட்டு ஏழு மணிக்கு வந்து ரசிகர்கள் 41 பேரு சாகடித்து விட்டு அதற்கு நான் தான் காரணமா என கேட்கிறார். அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது நிச்சயமாக கேட்கும் இதற்கு காரணமானவர்கள் யார் என்பது சிபிஐ அறிக்கை வர இருக்கிறது ஆனாலும் விஜய் செய்த தவறினால் தான் அந்த அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கிறது என பல்வேறு விதமான கருத்துக்கள் சொல்கிறார்கள்
இதனை எடுத்து இன்றைக்கு திமுக அரசாங்கம் பல சட்ட திட்ட விதிகளை கூட்டு வைத்துள்ளனர் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. சென்ற முறை ஈரோட்டில் விஜய் போட்ட பொதுக்கூட்டத்தில் மொட்டை வெயிலில் பட்ட பகலில் மக்கள் வாடிக் கொண்டிருப்பதாக கூறினேன் விஜய் போன்றவர்களுக்கு வெயிலில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல வாடிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு பச்சை தண்ணி கூட இல்லாமல் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இறக்கின்றார். அதற்கு ஐந்து லட்ச ரூபாய் நிதி கொடுக்கிறார். ஐந்து லட்ச ரூபாய் பிச்சை காசா சினிமாவில் நடித்து பல கோடி வைத்திருக்கிறீர்கள். பணம் கூட கொடுத்திருக்கலாமே என கேட்டேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.
நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பாதுகாப்பாக கூடாரம் அமைத்து லட்சக்கணக்கான மக்கள் அவரது பேச்சு கேட்கின்றனர் அது போல் உங்களுக்கு செய்வதற்கு வசதி இல்லையா என கேட்டேன். அது போல் செய்வதற்கு உங்களுக்கு வசதி இல்லையா வாய்ப்பு இல்லையா என கேட்டேன். இதனை அடுத்து உடனடியாக வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் கூடாரம் அமைத்து அதில் மக்கள் நிக்க வைத்து பேசி உள்ளார் விஜய். நியாயமான கோரிக்கை அவரது காதில் விழுந்து உள்ளது. மக்களை காப்பாற்றி உள்ளோம் என்ற சூழ்நிலை உருவாக்கி உள்ளோம்.
பாஜக என்ற மூழ்கின்ற கப்பலில் எடப்பாடி மாட்டிக் கொண்டு உள்ளார் என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், யார் மூழ்க்கிறார்கள். நீர் மூழ்கி கப்பலாக இருந்து மூழ்கின்ற கப்பலை மேல தூக்குகின்ற கட்சி தான் அதிமுக இருக்கிறது என பேசியது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் புகைச்சலை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஷாக்கிங் வீடியோ...!! - பாகனை தலைகீழாய் தூக்கி வீசிய யானை... கோயில் திருவிழாக்களில் அடுத்தடுத்து யானைகளால் அசம்பாவிதம்...!