சூடு பிடிக்கும் SIR பணிகள்... ஒரே இடத்தில் கூடிய தென் மாவட்ட ஆட்சியர்கள்... தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை...!
தமிழக தேர்தல் அதிகாரிகள் தென் மாவட்ட ஆட்சியர்களுடன் வாக்காளர் திருத்தம் தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார்.
இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர் திருத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிவங்கள் விநியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன், இந்திய தலைமை தேர்தல் துணை ஆணையர், தேர்தல் ஆணைய இயக்குநர், தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிங்க: விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால்... ஓபனாக பேசிய TTV தினகரன்..! செம்ம ஷாக்...!
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கண்காணிப்பு, மேற்கொள்ளும் விதம், குற்றச் செயல்கள் தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மதுரையில் நடந்த இந்த ஆலோசனையில் மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் கலந்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: கோவை சம்பவத்தில் தாமதம் ஏன்? என்ன நடக்குது முதல்வரே..? சந்தேகத்தை கிளப்பும் இபிஎஸ்..!