×
 

“பக் நாய்க்குட்டி போல மனைவி கணவனை...” - விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் வேதனை கருத்து...!!

கணவன் பணி புரியும் அனைத்து இடங்களுக்கும் மனைவியை உடன் அழைத்துச் செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று-  நீதிபதிகள் கருத்து.

திருமண உறவை மீறி மனைவி கள்ளத்தொடர்பு கணவன் விவாகரத்து கோரிய வழக்கு. வோடபோன் விளம்பரத்தில் வரும்  பக் நாய்க்குட்டியைப் போல மனைவியும் கணவனைத் தொடர்ந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என நீதிபதிகள் கருத்து.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் மனு தாக்கல் செய்திருந்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் இவர்களுக்கு குழந்தை உள்ளது நிலையில் மனைவி மற்றொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்து உத்தரவு பிறப்பித்தது இந்நிலையில் குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி GR சுவாமிநாதன், சுமதி ஆகியோர் விசாரணை செய்து வழங்கிய தீர்ப்பில். இந்து திருமணச் சட்டம் படி  விபச்சாரம் என்பது விவாகரத்து கோர முடியும். விசாரணை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவன் தாக்கல் செய்த மனுவில், மனைவி கள்ளத்தொடர்போடு இருந்தவரை  மனுதாரராக சேர்க்கவில்லை எனக் கூறி விசாரணை நீதிமன்ற நீதிபதி விவாகரத்து வழங்காமல் மனுவை தள்ளுபடி செய்திருக்கலாம் ஆனால் விசாரணை நீதிமன்ற நீதிபதி கணவர் மீது குற்றம் சாட்டி மனுவை நிராகரித்துள்ளார்.

இதையும் படிங்க: சமரசமா? சட்டப் போராட்டமா?... முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

கணவர் செய்த தவறுதான் என்ன? கணவர் வேலை தேடி சிவகங்கையை விட்டு வெளியேறி, மும்பையில் பணியாற்றி வந்தார். விசாரணை நீதிபதியைப் பொறுத்தவரை, இது திருமணக் கடமையை முழுமையாக மீறும் செயலாகும். விசாரணை நீதிபதி பின்வருமாறு கூறியிருந்தார்:

​"சட்டப்படி, மனைவியைப் பராமரிக்க வேண்டிய கடமை கணவனுக்கு உண்டு.  கணவன் எங்கு சென்றாலும் மனைவியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்; விபச்சாரத்திற்கோ அல்லது அதுகுறித்த வதந்திகளுக்கோ அவன் காரணமாகிவிடக் கூடாது என்பது ஒவ்வொரு கணவனின் புனிதமான கடமையாகும். ஆகவே, கணவன் மனைவியுடன் இணைந்து வாழ்ந்து, அவளது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்தால் மட்டுமே, அவன் விபச்சாரம் அல்லது கொடுமைப்படுத்தல் எனும் வாதத்தை முன்வைக்க முடியும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. 

ஆனால், எந்தக் காரணத்திற்காகவும் மனைவியை உடன் அழைத்துச் செல்ல கணவன் தவறினால், அவனே இந்தக் குற்றத்தின் தூண்டுதலாவான் என்பதால், அவனால் விபச்சார வாதத்தைக் கூட முன்வைக்க முடியாது; மேலும் தனது சொந்தத் தவறிலிருந்து அவன் நன்மையடைய அனுமதிக்கப்பட முடியாது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

​தீவிர பெண் உரிமைவாதிகள் விசாரணை நீதிமன்றத்தின் இந்த புரட்சிகரமான அணுகுமுறையைப் பாராட்டலாம். ஆனால், வருத்தத்துடன் கூறுகிறோம்—எங்களால் இதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது. 


மனைவியை எப்போதும் உடன் அழைத்துச் செல்வது சாத்தியமில்லாமல் போகலாம். உதாரணமாக, கணவன் ஒரு ராணுவ வீரராக இருந்தால், ராணுவப் முகாமிற்குள் குடும்பம் நடத்துவது சாத்தியமில்லை. அல்லது மனைவி நல்ல வேலையில் இருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது அனைத்து இடங்களுக்கும் மனைவி அழைத்துச் செல்வது என்பது சாத்தியமில்லை

வோடபோன் விளம்பரத்தில் வரும் பக் நாய்க்குட்டியைப் போல மனைவியும் கணவனைத் தொடர்ந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. கணவருக்கு  இப்போது 67 வயதாகிறது. தம்பதியினர் கடந்த 16 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர். மனைவி மீண்டும் சேர்ந்து வாழ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 

ஒரு திருமண உறவு மீட்க முடியாதபடி முறிந்துபோய், நீண்ட காலப் பிரிவும் தாம்பத்தியமின்மையும் இருக்கும் சூழலில், அந்தத் 'திருமணத்தை' மேலும் தொடர அனுமதிப்பது, ஒருவருக்கொருவர் இழைத்துக் கொள்ளும் கொடுமைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பதாகவே அமையும். எனவே இவர்களது திருமணம் கலைக்கப்படுவதாக அறிவிக்கிறோம். விவாகரத்து வழங்கப்படுகிறது.

ஆனால் இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு , தகுந்த ஜீவனாம்சம்  வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.  கணவர் எதிர்மனுதாரருக்கு மனைவிக்கு ரூ. 7 லட்சம்  வழங்க உத்தரவிடுகிறோம். எனக்கூறி விவாகரத்து வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் குற்றவாளிகள் யார்? உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம்! பிடிஆர் பகீர் ட்வீட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share