×
 

தீபாவளி பரிசு காத்திருக்கு? மாட்டிக்காத... உஷாரு! காவல்துறை எச்சரிக்கை

தீபாவளி பரிசு விழுந்திருப்பதாக கூறி சைபர் கிரைம் குற்றங்கள் நடத்தப்படுவதாக போலீஸ் எச்சரித்துள்ளது.

சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் பல்வேறு சட்டவிரோத சம்பவங்களை செய்ததாக கூறி சில நபர்களை குறி வைத்து பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் உயர் அதிகாரிகள் போல் தங்களை அடையாளப்படுத்தி பணம் பறிக்கும் சம்பவங்களும் நிகழ்கிறது.

இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் சைபர் கிரைம் போலீசார் ஏற்படுத்தி வரும் நிலையில், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளை புதுப்பிக்க வேண்டும், வங்கி கணக்கு புதுப்பிக்க வேண்டும், ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது, பரிசு வென்றீர்கள் என பல்வேறு விஷயங்களை கொண்டு சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களை குறி வைத்து இது போன்ற குற்றங்கள் நடத்தப்படுகிறது.

செல்போன்களுக்கு காவல்துறை போன்றும் வங்கிகளில் இருந்து மெசேஜ்கள் அனுப்பப்படுவது போல போலி கணக்குகளை வைத்து லிங்க் அனுப்பி பணம் மோசடி நடைபெறுகிறது. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் ஆங்காங்கே சைபர் குற்றங்கள் நடக்க தான் செய்கின்றன.

இதையும் படிங்க: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்... தீபாவளி பரிசு கொடுத்த முதல்வர் ரங்கசாமி..!!

தற்போது, தீபாவளி நெருங்கும் நிலையில், பரிசுக் கூப்பன் விழுந்திருக்கிறது, பரிசு கிடைத்திருக்கிறது என்ற பெயரில் அதிகளவில் சைபர் மோசடி புகார்கள் பெறப்படுவதாக காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது. போலியான E-Commerce இணையதளங்கள், சமூக வலைதள பக்கங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து மக்கள் தங்களது தகவல்களைப் பகிர்ந்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளில் இருந்து மக்கள் தற்காத்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: கோயிலை சுற்றி பட்டாசு வெடிக்காதீங்க..!! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share