தீபாவளி PURCHASE... நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்... திணறும் தி. நகர்...!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புது துணிகள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வரும் இருபதாம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை அணிந்து அனைவரும் தீபாவளி பண்டிகையை பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள். இந்த நிலையில், பட்டாசுகள், புது துணிகள் வாங்குவதில் மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் எட்டு மட்டுமே நாட்கள் இருப்பதால், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஜவுளிக்கடைகளில் ஆடைகளை வாங்கி செல்கின்றனர். காலை மதுரை ஜவுளி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக டி. நகர் ரங்கநாதன் தெரு களைகட்டியது.
புது டிசைன்கள், புத்தம் புது வரவுகள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆடைகளும் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆடைகள் குவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அலைமோதுகின்றனர்.
இதையும் படிங்க: தித்திக்கும் தீபாவளி..!! கலிபோர்னியாவில் அரசு விடுமுறையாக அறிவிப்பு: வரலாற்று மைல்கல்..!!
டி நகர் ரங்கநாதன் தெருவில் தரையே தெரியாத அளவுக்கு வெறும் மனித தலைகளாகவே காணப்படுகிறது. அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. புது ஆடைகளை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு புது ஆடைகள் வாங்குவதற்கு மக்கள் குவிந்து வருவதால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதேபோல் உஸ்மான் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களை கொண்டு கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக யாருடன் கூட்டணி வெச்சா என்ன? திமுகவுக்கு என்ன கஷ்டம்… விளாசிய இபிஎஸ்…!