×
 

"எல்லாத்தையும் முருகர் பார்த்துப் பாரு"..! திருச்செந்தூரில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குடும்பத்துடன் சாமி தரிசனம்..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் சாமி தரிசனம் செய்தார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். தமிழ் கடவுள் ஆன முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர் முருகனின் அருள் பெறுவதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வருகை தருவார்கள். தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக சென்று சாமி தரிசனம் செய்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அவர் முருகன், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களை வணங்கினார்.

இதையும் படிங்க: கள்ளச் சந்தையில் மது... தடுக்க தவறிய திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..! அதிரடி நடவடிக்கை.!!

வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு முருகனை தரிசனம் செய்ய வருகை தந்ததாக தெரிவித்தார். மேலும் இந்த முருகப்பெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர். நேற்றைய தினம் தமிழக முதல்வருக்கு போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன் என்றும் கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் முடித்து விட்டது., தொடர்ந்து முருகன் அருள் புரிவான் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2027ம் ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share