×
 

நாளை தேமுதிக மாநாடு..! யாருடன் கூட்டணி?.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் பிரேமலதா..!

நாளை தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் மாநில மாநாடு, மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 என்ற பெயரில் நாளை கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி வைக்கிறார்.

கட்சி நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு, தேமுதிகவின் முதல் பெரிய மாநாடாக இது பார்க்கப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களை அதிக அளவில் திரட்டி, இதை பிரமாண்ட வெற்றி மாநாடாக அமைக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வீடியோ மூலமும், அறிக்கைகள் மூலமும் தொண்டர்களை அழைப்பு விடுத்துள்ளார்.

கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், மக்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் இந்த மாநாடு முக்கிய தளமாக அமையும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த மாநாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு, வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பு. தேமுதிக தொண்டர்களை எதிர்பார்ப்போடு வைத்திருக்கிறது.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின், இபிஎஸ்-ஐ சந்திக்கும் தேமுதிக நிர்வாகிகள்! பிரேமலதா போடும் மாஸ்டர் ப்ளான்!

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை சேகரித்த பிறகு, இறுதி முடிவை மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என ஏற்கனவே கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தொண்டர்கள் விருப்பப்படி, மக்கள் நலனுக்கு ஏற்ற கூட்டணியை அமைப்போம் என பிரேமலதா உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: விரைவில் கூட்டணி அறிவிப்பு... ஜன. 5ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share