×
 

தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள்..? பிரேமலதா தலைமையில் மா.செ. கூட்டம் தொடக்கம்..!!

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

தேமுதிக கட்சி கடந்த பிப்ரவரி மாதம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இதைத் தொடர்ந்து, ஒரு ராஜ்யசபா இடம் தேமுதிகவுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி குழு இறுதி முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கூட்டத்தில், திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல், கட்சியின் வலிமை உள்ள மாவட்டங்கள், முந்தைய தேர்தல் அனுபவங்கள் ஆகியவை விரிவாக விவாதிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: சட்டசபை தேர்தலில் போட்டியா? பிரசாரம் மட்டுமா? பிரேமலதா விஜயகாந்த் தீவிர ஆலோசனை!!

கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளைத் திரட்டி, திமுக தலைமைக்கு முன்மொழியப்படும் தொகுதி கோரிக்கைகளை இறுதி செய்யும் நோக்கில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் தேமுதிகவின் தேர்தல் உத்திகளை வலுப்படுத்துவதோடு, கட்சியின் அடித்தள நிர்வாகிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொகுதி பங்கீடு இறுதியான பிறகு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 

இதையும் படிங்க: இந்த தொகுதிகள்லாம் எங்களுக்கு ஒதுக்கிருங்க! லிஸ்ட் போட்டு நீட்டிய கூட்டணி கட்சிகள்! குழப்பத்தில் திமுக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share