இதுவே கடைசியா இருக்கட்டும்... டென்ஷனின் உச்சிக்கே சென்ற பிரேமலதா... தேமுதிக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை...!
தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்திற்கு கட்சிக்கார்கள் மிகவும் குறைவாக வந்ததால் ஆத்திரமடைந்த பிரேமலதா விஜயகாந்த் கூட்டம் இல்லாமல் நடத்திய முதலும் கடைசிக் கூட்டமாக இதுவாகத்தான் இருக்க வேண்டும் என ஆத்திரத்துடன் எச்சரித்தார்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றுதான் எங்கள் கொள்கை எங்கள் ஒரே இலக்கு நாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோமோ அமைக்கிறோமோ அந்த கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். துணிந்தவனுக்கு எதுக்கும் பயமில்லை. உலகமே ஒருவரை அன்னதான பிரபு என்று கூறுவது கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான். ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று திட்டத்தை அப்போதே சொன்னவர் நமது கேப்டன்.
டெல்டா மாவட்டத்தில் கூட்டம் இல்லாமல் நடத்திய முதலும், கடைசி கூட்டமாக இதுதான் இருக்கும் என நம்புகிறேன். 1000 பேர் அமரக்கூடிய மண்டபத்தில் 500 பேர் அமர்ந்திருக்கிறீர்கள் மாவட்ட செயலாளரிடம் கேட்டபோது திங்கட்கிழமை வேலை இருக்கும் என்பதால் கூட்டத்திற்கு வரவில்லை நாங்கள் வேலையில்லாமல் வந்திருக்கிறோமா வந்தவர்களுக்கு தான் வேலை இல்லையா என கேள்வி கேட்ட அவர் பள்ளி மாணவர்களை போல் உடல்நிலை சரியில்லை விடுப்பு எடுத்துக் கொள்கிறேன் என்பது போல் உள்ளது. அழைப்பிதழில் பெயர் இல்லை என்றால் எவ்வளவு கோபப்படுகிறீர்கள்? பெயர் சின்னதாக உள்ளது என்றால் எவ்வளவு கோபப்படுகிறீர்கள் நிர்வாக பொறுப்பு மட்டும் வாங்கிக் கொண்டால் பத்தாது பணியாற்ற வேண்டும் என ஆவேசத்துடன் பேசினார்.
இதையும் படிங்க: “நான் எப்ப அப்படி சொன்னேன்?” - அந்தர் பல்டி அடித்த அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த்... எடப்பாடி விவகாரத்தில் உல்ட்டா...!
எனவே வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நமது கேப்டனின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
இதையும் படிங்க: அதிரும் தேர்தல் களம்... விஜயகாந்துடன் விஜயை ஒப்பிட்டு பிரேமலதா சொன்ன அந்த வார்த்தை...!