×
 

பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வீரமச்சான் பட்டி ஊராட்சியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி சுகன்யாவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியுடன் குழந்தையைப் பராமரித்து வந்த நிலையில், பிறந்து வெறும் மூன்று நாட்களே ஆன நிலையில் இன்று காலை மருத்துவமனையில் ஒரு பெண் வந்துள்ளார்.

அந்தப் பெண் மருத்துவமனை பணியாளர் சீருடை அணிந்திருந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று நட்பாகப் பேசி, தாயிடமிருந்து குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை திரும்பி வராததை உணர்ந்த தாயும் உறவினர்களும் மருத்துவமனை முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. உடனடியாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்ற போலீசார் உடனடியாக செயல்பட்டனர். மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் குழந்தையைத் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏறிச் செல்வது தெளிவாகத் தெரிந்தது. இதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெற்றெடுத்த தாயின் அருகிலிருந்த குழந்தையை, பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பையும் மீறி மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருப்பது திமுக அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன என்ற கேள்வியை எழுப்பி உள்ளதாக கூறியது.

இதையும் படிங்க: உச்சி வெயில்ல தான் கூட்டம் நடத்தணும்...! TVK மீட்டிங்கிற்கு போலீஸ் கெடுபிடியா? நடந்த உண்மை என்ன?

தன் குழந்தையை பறிகொடுத்துவிட்டு அழுது துடிக்கும் அந்த தாயின் கண்ணீருக்கு இந்த ஸ்டாலின் மாடல் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்று கேட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்த திமுக அரசின் நிர்வாகத் தோல்வி என்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு எங்கே என்றும் தாயின் மடியில் தவழ வேண்டிய குழந்தை எங்கே எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. 

இதையும் படிங்க: தமிழின் தொன்மையை தேடித் தேடி பறைசாற்றுவோம்..! கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம்... முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share