×
 

தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

தேர்தல் தேதி அறிவித்ததும் தில்லாலங்கடி வேலையை திமுக ஆரம்பித்து விட்டதா என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மனித பட்டிகளை அமைத்து வாக்கு பெறும் செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார் 

பட்டி வைத்து வாக்கு கேட்பது என்பது வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பது அல்ல. அதற்கு மாறாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் மக்களை ஒருங்கிணைத்து, பொது இடத்தில் நின்று பேசுவது, பிரச்சாரம் செய்வது, குறைகளைக் கேட்பது, வாக்குறுதிகளை அளிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது.

பெரும்பாலும் கிராமங்கள், சிறு நகரங்கள், குடியிருப்புப் பகுதிகளில் இது அதிகம் நடைபெறும். ஒரு தெருவின் தொடக்கத்தில் அல்லது முக்கிய சந்திப்பில் "பட்டி" வைத்து, "இங்கே வாருங்கள், உங்கள் பிரச்சினைகளைச் சொல்லுங்கள், எங்கள் திட்டங்களைக் கேளுங்கள்" என்று அழைப்பு விடுப்பார்கள். அந்த வகையில் ஆதார் எண், அலைபேசி எண், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு மனிதப் பட்டிகளை திமுக செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி உள்ள அதிமுக தேர்தல் தேதி அறிவித்தவுடன் தனது தில்லாலங்கடி வேலைகளை ஸ்டாலின் மாடல் அரசு ஆரம்பித்து விட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..? விளாசிய அதிமுக..!!

தனது ஆட்சிகால சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க திராணியில்லாமல், மக்களை பட்டியில் அடைத்து வைத்து அதிகார பலத்தை கொண்டு பணத்தால் வாக்குகளை பெற முயலும் அவலம் திகழ்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதான் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் லட்சணமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து திமுகவின் அட்டூழியங்களை அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் பட்டியலிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share