×
 

முதல்வருடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு... தமிழக அரசியலில் பரபரப்பு!

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

தமிழகத்தில் சமீப நாட்களாக ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. நீதிமன்ற கருத்தை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் அதிகரித்திருப்பதாக கூறி இருந்தார். 

சமீபத்தில் நெல்லையில் கவின்குமார் என்ற இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மாற்று சமூகத்தைச் சேர்ந்த கவினை சுபாஷினி என்ற பெண் காதலித்து வந்த நிலையில் சாதிய வெறியால் சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் என்பவர் கவின் குமாரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். சாதி வெறியால் நிகழ்ந்த இந்த ஆணவக் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அப்போதுதான் ஆணவ படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தடுக்கப்படும் எனவும் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்துள்ளனர்.

இதையும் படிங்க: வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலினின் பயணம்... எதுக்கு போறாரு தெரியுமா? முழு விவரம்...

ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING: வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்... முக்கிய திட்டங்கள் குறித்து விவாதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share