×
 

எங்களுக்கு வேண்டாம்! SIR தமிழ்நாட்டுக்கு பாதகம்... திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் திருத்த பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை எதிர்த்து நவம்பர் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாட்டையை சுழற்ற தயாராகும் ஸ்டாலின் ... திமுக முக்கிய அமைச்சரின் பதவி விரைவில் பறிப்பு?

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெல்லை திமுக கோட்டையா இருக்கணும்! நிர்வாகிகளுக்கு கறார் காட்டிய முதல்வர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share