தெருவுக்கு தெரு டாஸ்மாக்..! ACCIDENT-ல் நம்பர்.1 தமிழ்நாடு... ஆனா இந்த திமுக இருக்கே... விளாசிய அண்ணாமலை...!
சாலை விபத்துகளில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிக்கையை சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாலை விபத்துக்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக சாலை விபத்துக்கள் ஏற்படுவதாக அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
அந்த அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு மாறி இருப்பது, பாராளுமன்றத்தில், மத்திய சாலைப் போகுவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.
கடந்த 2021 – 2024 நான்கு ஆண்டுகளில், 2,54,526 சாலை விபத்துகள் தமிழகத்தில் பதிவாகியிருக்கின்றன என்றும் நாட்டின் மற்ற எந்த மாநிலங்களிலும், இத்தனை விபத்துகள் ஏற்படவில்லை. தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது எனவும் கூறினார். சாலை விபத்துக்களால், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 50 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் தரமற்ற, சீர்குலைந்த சாலைகள் ஒரு காரணமாக இருந்தாலும், தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க, தெருவுக்குத் தெரு டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறந்து வைத்துள்ள திமுக அரசின் அலட்சியப்போக்கே இதற்கு முக்கியக் காரணம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊழலும், மோசடியும் இல்லாத துறையே இல்ல... திமுக அரசை பந்தாடிய அண்ணாமலை...!
கட்டுப்பாடற்ற மது மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையால் ஏற்படும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவது, அப்பாவி பொதுமக்களே என்றும் குற்றம்சாட்டினார். ஆனால், திமுக அரசுக்கு மது விற்பனை மூலம் கிடைக்கும் பணமே முக்கியமாகத் தெரிகிறது என்றும் சாடியுள்ளார். போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கவோ, சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்தவோ, பொதுமக்களின் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்யவோ இயலாத இந்த கையாலாகாத திமுக அரசு, விரைவில் தூக்கி எறியப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் போனா நானும் போகனுமா?... அண்ணாமலையை சந்தித்த பின் டோட்டலாக மாறிய டிடிவி தினகரன்...!