×
 

அதிரும் அரசியல் களம்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... அதிமுகவில் அடுத்த இடி...!

திமுக மேடைகளில் பேசுவதையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மேடையில் பேசுகிறார். எனவே எடப்பாடி பழனிச்சாமி திமுகவில் இணைந்து கொள்ள அழைக்கிறேன் என திமுக கொள்கை பரப்பு செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பேச்சு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் பகுதியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம்  வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி  மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில். 

கடந்த வாரம் வரை பன்னீர்செல்வம் அவர்களை பற்றி ஏதேனும் பேசி இருக்கலாம். ஆனால் இன்று அவரும் கட்சியில் சேர்ந்துவிட்டார். நாங்கள் யாரை தான் விமர்சனம் செய்வது என தெரியவில்லை. ஒன்றிய, பாசிச, பாஜக அரசை எதிர்த்து போராட வேண்டுமென்றால் திமுக மட்டும் போராடினால் போதாது. ஒட்டுமொத்த தமிழ்நாடே வாருங்கள் ஒன்றிணைவோம் எனக் கூறி முதல்வர் அழைக்கிறார். இதனைக் கண்ட ஓ. பன்னீர்செல்வம் ஒரு அணியில் தமிழ்நாடு என்பதில் நானும் இணைந்து விடுகிறேன் என கூறி கட்சியில் இணைந்து விட்டார்.

பத்து தோல்வி பழனிச்சாமி என்றதும் சசிகலா காலில் விழுந்து தான் நினைவுக்கு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக திமுக தலைமை சொற்பொழிவாளராக பழனிச்சாமி திமுகவில் இணைந்து விட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி திமுக மேடைகளில் பேசுவதையெல்லாம் அதிமுக மேடையில் பேசியுள்ளார். திமுக ஆட்சிக்கு நற்சான்றிதழும் பாராட்டும் தந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம் எனவே எடப்பாடி பழனிச்சாமி திமுகவுக்கு அழைக்கிறேன்.

இதையும் படிங்க: அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் உரிமையையும், மானத்தையும் ஒன்றிய அரசிடம் அடமானம் வைத்துவிட்டு, அமித்ஷா,  மோடியின் காலில் விழுந்து கிடக்கும் நிலையை பார்க்கும் போது இந்த நாட்டுக்கு எடப்பாடி தேவையில்லை, அதிமுகவுக்கும் அவர் தேவையில்லை. எனவே ஸ்டாலின் எனும் இரும்பு மனிதரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என பேசினார். 
 

இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!! இபிஎஸ் ரூட் கிளியர்... தலைகீழாக திருப்பி போட்ட `இரு திருப்பங்கள்’ ... !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share