×
 

சூடுபிடிக்கும் அரசியல் களம்..! பிப்ரவரி முழுவதும் திமுக தேர்தல் பரப்புரை..! தலைமைக் கழகம் அறிவிப்பு..!

பிப்ரவரி மாதம் முதல் 234 தொகுதிகளிலும் திமுக சார்பில் பிரச்சாரம் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வந்தார்.  இந்த ஆலோசனைகள், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.

கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சிகளின் முக்கிய பகுதியாக, அவர் திமுக நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். 2026 இல் மீண்டும் திமுகவின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

திமுகவின் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் விதமாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பாக திமுக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் உயர் சிறப்பு மருத்துவமனை.. அடிக்கல் நாட்டி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள் என்றும் இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: இதுவரை 3 லட்சம் பெண் குழந்தைகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி..! தமிழ்நாடு முன்னோடி... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share