நாங்க ஆரம்பிச்சா தாங்கமாட்டீங்க... அண்ணாமலைக்கு சவால்விட்ட திமுக வேட்பாளர்...!
நான் செய்த சாதனைகளை பட்டியலிட தயார் பாஜக வேட்பாளர் செய்த சாதனைகளை வெளியிட தயாரா என வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜா சவால் விடுத்துள்ளார்.
நேற்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பாஜக வேட்பாளர் ஆனந்தன் ஐயா சாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2021 திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் செண்பகவல்லி அணையை சரி செய்வோம், அதிலிருந்து தண்ணீரை கொண்டு வருவோம் வாக்குறுதி எண் 84 சொல்லியிருக்காரு. தண்ணி வந்துட்டாங்கய்யா எதையும் செய்யவில்லை.
இன்னைக்கு நீங்க யோசிச்சு பாருங்க அஞ்சு முறை கடந்து ஐந்தாண்டுகள்ல நம்முடைய முதலமைச்சர் அய்யா ஸ்டாலின் அவர்கள் ஐந்து முறை கேரளாவுக்கு போனார். ஐந்து முறை போராட்டத்துக்கு போனாரு கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஆண்டு விழாவிற்கு ஒருமுறை கூட செண்பகவல்லி அணையைப் பற்றி வாயைத் திறந்தவர் பேசவில்லை” என சரமாரியாக குற்றச்சாட்டியிருந்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு புதூர், அச்சன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் திமுக வேட்பாளர் ராஜா, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடினார். அண்ணாமலை படித்து அறிவுள்ளவர் போல் நடக்க வேண்டும். தாம் பேசத் தொடங்கினால் தாங்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..! பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு பெயர் வைத்த அண்ணாமலை..!!
நான் செய்த சாதனைகளை பட்டியலிட தயார் பாஜக வேட்பாளர் செய்த சாதனைகளை வெளியிட தயாரா என சவால் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...!