×
 

வெற்றிக் கனியை தலைவருக்கு சமர்ப்பணம்... 2 தொகுதியிலும் திமுக தான்..! வேட்பாளர் பரந்தாமன் உறுதி..!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், தமிழக அரசியலில் நன்கு அறியப்பட்ட முகங்களில் ஒருவர். எழும்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இவர், திமுகவின் தீவிரத் தொண்டராகவும், கட்சியின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராகவும் விளங்குகிறார். சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த இவர், தலித் சமூகத்தின் பிரதிநிதியாக அடையாளம் காணப்பட்டு, இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வந்தார்.2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பரந்தாமன், அப்போது சுமார் ஐம்பத்தேழு விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார். தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருந்தார். அரசியல் அரங்கில் தீவிரமாகப் பங்கேற்று, கட்சியின் கொள்கைகளை உரத்த குரலில் முன்வைத்து வந்தார்.

சட்டமன்ற விவாதங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் அவர் ஆற்றும் உரைகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.2026ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சிக்குள் சில விவாதங்கள் எழுந்தன. இருந்தாலும், கட்சித் தலைமையின் நம்பிக்கையைத் தொடர்ந்து பெற்று, பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். தற்போது மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, கட்சியின் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது. மதுராந்தகம் தனித் தொகுதி என்பதால், பரந்தாமன் போன்ற தலித் முகத்தைக் களமிறக்குவது திமுகவின் உத்தியாக அமைந்துள்ளது.

இதனிடையே, திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள் என்றும் அதனால் வெற்றி நிச்சயம் எனவும் தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழக அரசின் அவலங்களை வீடு வீடாகச் சென்று எடுத்துக் கோரி வெற்றி பெறுவோம் எனவும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. யார் இந்த பரந்தாமன், சுகன்யா? வேட்பாளர்களின் முழு பின்னணி இதோ!!

இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளையும் வெற்றி பெற்று அதனை திமுகவின் வசமாக்குவோம் என்றும் உறுதிப்படக் கூறினார். தமிழக வெற்றிக்கழக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வெற்றி பெற்று அந்த வெற்றிக் கனியை தலைவரிடம் சமர்ப்பிப்போம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து இருப்பதாகவும் பரந்தாமன் குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: விஜய் vs ஸ்டாலின்! திமுகவை விடப்போவதில்லை! அடுத்த 3 மாதங்களுக்கு தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share