தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் மாஸ்டர் மூவ்... விஜய்க்கு புதிய நிபந்தனை..!
எம். பி. க்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த நிலையில், திமுக நிபந்தனை விதித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய், மத்திய அரசு முன்வைத்துள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தை ஆலோசிக்க தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களையும் அழைத்துள்ளார். இந்த கலந்தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வாயிலாக அனைத்து எம்பிக்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த கூட்டத்தின் நோக்கம், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கத்தை விவாதித்து, அனைத்து எம்பிக்களின் கருத்துகளையும் ஒருங்கிணைத்து பொதுவான நிலைப்பாட்டை உருவாக்குவதே ஆகும். முதலமைச்சர் விஜய் இந்த மறுவரையறை நடவடிக்கை தமிழகத்தின் நலனுக்கு பாதகமாக அமையும் என்ற நிலையை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களின் கருத்துகளை இந்த கூட்டத்தில் கேட்க உள்ளார்.இந்த அழைப்புக்கு திமுக பதிலளித்துள்ளது. கட்சி தனது அறிக்கையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகப்படுத்துவது குறித்து எந்த குறிப்பும் இல்லாத நிலையில், எந்த அரசியல் கட்சியும் திமுகவுக்கு ஆலோசனை கூறும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதேநேரம், தொகுதி மறுவரையறை தொடர்பான ஆபத்துகளை முதலில் சுட்டிக்காட்டி, அதற்கு எதிரான கருத்தை வலுப்படுத்தி, பல குரல்களை ஒருங்கிணைத்தது திமுகவே என்று வலியுறுத்தியுள்ளது. இந்த தொடர்ச்சியான நிலைப்பாட்டின் அடிப்படையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறும் எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்துகளை முன்வைக்க திமுகவுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அவரு தான் எல்லாமே.! கருப்பு கண்ணாடியும் கரகரத்த குரலும்...! கலைஞரை நினைவுக் கூர்ந்த ஸ்டாலின்..!!
ஆனால் அதற்கு முன்னர் ஒரு நிபந்தனையை திமுக விதித்துள்ளது. கர்நாடக அரசு மேற்கெடாட்டு அணையை கட்ட மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனை நிறைவேற்றப்பட்ட பின்னரே தொகுதி மறுவரையறை தொடர்பான எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்பதாக திமுக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே இடத்தில் ஒன்று கூடிய திமுக உடன் பிறப்புகள்... மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரினா நோக்கி பேரணி...!