×
 

தி.குன்றம் தீபம் விவகாரம்!! திமுகவுக்கு நெருக்கடி! பழனிசாமி முதல் பவன் கல்யான் வரை அதிரடி!!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மூன்று முறை நீதிபதி உத்தரவிட்டும், திமுக அரசு அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை மூன்று முறை தெளிவாக உத்தரவிட்டும், திமுக அரசு அதை நிறைவேற்ற மறுத்து வருவதால் தமிழகம் முழுவதும் இந்துக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். நேற்று இரவும் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 

இந்து விரோத அரசு என்று திமுகவை எதிர்க்கட்சிகள் தாக்கி வரும் நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த கார்த்திகை தீப வழிபாட்டை மீட்டெடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடங்கி டிவிஷன் பெஞ்ச் வரை மூன்று முறை தெளிவாக தீபம் ஏற்ற அனுமதி அளித்தனர். ஆனால் திமுக அரசு “சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்” என்று சொல்லி தடுத்து வருகிறது. 

இதையும் படிங்க: 'அம்மா'வின் புகழை போற்றி வணங்குகிறேன்..!! தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உருக்கம்..!!

நேற்று இரவு நடு ராத்திரி வரை மலைக்கு செல்ல முயன்ற பாஜகவினரையும் இந்து அமைப்பினரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் இந்து அமைப்பினர் மட்டுமல்ல, பொதுமக்களும் கொதித்துப் போயுள்ளனர்.

இந்து விரோத செயலை கண்டித்து ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா தலைவருமான நடிகர் பவன் கல்யாண் கடும் அறிக்கை வெளியிட்டுள்ளார். “கோர்ட் உத்தரவை மதிக்காமல், ஒரு சமூகத்தை மகிழ்விக்க இந்துக்களின் உரிமையைப் பறிக்கும் திமுக அரசின் போக்கு ஜனநாயக விரோதம். கைது செய்யப்பட்ட பாஜக தலைவர்கள் உட்பட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் திமுகவை தோலுரித்தார். “கோர்ட் உத்தரவை நிறைவேற்ற முடியாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும் ஸ்டாலின் மாடல் அரசு சட்டத்திற்கு அப்பாற்பட்டதா? வேண்டுமென்றே மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து, தேர்தல் அரசியல் ஆதாயம் தேடுகிறது திமுக” என்று கொதித்தார்.

கைது செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன், எச்.ராஜா ஆகியோருக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறிய பழனிசாமி, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன்செல்லப்பாவை நேரில் சந்திக்க அனுப்பி ஆதரவு தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பின்னரும் தளராத தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை தீயாக பரவி வருகிறது. “பாசிச திமுகவின் பாச்சா பாஜகவிடம் பலிக்காது! இந்து வழிபாட்டு உரிமைகளை அழிக்க நினைக்கும் இந்து விரோத அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அமைதியாக போராடும் பாஜக தொண்டர்கள் மீது பெருமை கொள்கிறேன்” என்று அவர் சூளுரைத்தார். “ஆயிரம் அடக்குமுறைகள் வந்தாலும் பாஜக தொண்டர்களின் மன உறுதியை அசைக்க முடியாது” என்று அவர் உறுதியளித்தார்.

இந்து முன்னணி தவிர பல்வேறு இந்து அமைப்புகளும் திமுக அரசை “இந்து விரோத” என்று முத்திரை குத்தி வருகின்றன. “நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு எப்படி மக்களை மதிக்கும்?” என்று சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். 

திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது தமிழகத்தின் மத நல்லிணக்கத்தை சோதிக்கும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிக்க உள்ள நிலையில், இந்து பக்தர்கள் அனைவரும் பரபரப்புடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: வார்னிங்!! இந்தியாவை சிதைக்க திட்டமிடும் அசிம் முனீர்! போரை துவங்க திட்டம்!! வெளியான முக்கிய் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share