நாங்க டச்சு கூட பண்ணதில்ல... ஜெயலலிதா பெயரை சொல்லி தவெகவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்...!
அதே இடத்தில் ஜெயலலிதா அவர்களின் கல்வெட்டு அங்கே இருக்கிறது நாங்கள் டச் கூட பண்ணல
அதே இடத்தில் ஜெயலலிதா அவர்களின் கல்வெட்டு அங்கே இருக்கிறது நாங்கள் டச் கூட பண்ணல. அரசியலில் இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது பெருந்தன்மைக்கு உகந்தது அல்ல. விவரம் புரியாதவர்கள் அரசியலுக்கு வந்ததால் விவரம் இல்லாமல் காரியங்கள் செய்து கொண்டிருக்கிறார் என காட்பாடியில் திமுக பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கருத்து
காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் பதித்த கல்வெட்டு அகற்றப்பட்டு இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஜெயலலிதா அவர்களின் கல்வெட்டு அங்கே இருக்கு. அத நாங்க டச் கூட பண்ணல. ஆனா அவங்க துடைச்சிட்டு போயிட்டு இருந்தாங்க. அதுக்கப்புறம் இந்த திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினவர் தளபதி அவர்கள் அதனால அவர் பெயர் போட்டிருக்கிறோம்.
ஆகையினால இது எல்லாம் அரசியல்ல சிறுபிள்ளைத்தனமானது. பெருந்தன்மைக்கு உகந்தது அல்ல சிறு பிள்ளைத்தனமானது விவரம் புரியாதவர்கள் அரசியலுக்கு வந்ததால் விவரம் இல்லாமல் காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்."
இதையும் படிங்க: விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!
"அதேபோல வைகோ கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில வந்து கமிஷன் கரப்ஷன், கலெக்ஷன் என கடும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் மேலும் 'திமுக தவேகவை ஆட்சியில் இருந்து கலைக்கலாம்னு பார்த்தா நான் வந்து அரணாக நின்று காப்பேன்' எனக்கு செய்தியாளர்கள் எழுதிய கேள்விக்கு, அமைச்சர் துரைமுருகன் அவருடைய பாணியில் அய்யய்யோ அய்யயோ அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் எனக் கூறிக் கொண்டே, என்னுடைய நண்பர் அதனால்தான் வேணாங்கிறேன். அதான் நான் வேணாங்கிறேன், அவர் வருத்தப்படுவார் எனக் கூறினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!